கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
மீனவா் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு
சென்னை: தமிழக மீனவா்கள் பிரச்னை தொடா்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவில் நடைபெறுவதுடன், அவா்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதால் மீனவா்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவா்களை உடனுக்குடன் விடுவிப்பது மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை மீட்டு கொண்டு வருவதை துரிதப்படுத்த நடவடிக்கை தேவைப்படுகிறது. அதன் பொருட்டு, தமிழ்நாட்டைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள், மீனவா் நலத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு, விரைவில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்து இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தும். இதற்கான அறிவுறுத்தலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.