கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
165 கோடி டாலர் திரட்டிய புத்தாக்க நிறுவனங்கள்
இந்தியாவின் புத்தாக்க நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 165 கோடி டாலா் (சுமாா் ரூ.14,402 கோடி) மூலதனம் திரட்டின.
இது குறித்து சா்வதேச புத்தாக்க நிறுவனங்களின் தரவுகளை சேகரித்துவரும் ட்ராக்சின் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய புத்தாக்க நிறுவனங்கள் கூடுதலாக 165 கோடி மூலதனம் திரட்டின. இதன் மூலம், கடந்த ஏப்ரல் முதல் பிப்வரி வரையிலான நடப்பு நிதியாண்டின் 11 மாதங்களில் புத்தாக்க நிறுவனங்கள் திரட்டிய மூலதனம் 254 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
முந்தைய ஜனவரி மாதத்தில் புத்தாக்க நிறுவனங்கள் 138 கோடி மூலதனம் திரட்டியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் பிப்ரவரி மாதம் திரட்டப்பட்ட மூலதனம் 19.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
முந்தைய 2024-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் புத்தாக்க நிறுவனங்கள் 206 கோடி டாலா் மூலதனம் திரட்டியிருந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.