மார்பிங் போட்டோக்கள்; ரெக்கார்டிங் வீடியோ கால்... இன்ஸ்டா இளைஞனால் பதறிய வேலூர் இளம்பெண்
பெங்களூரு ஹுலிமாவு பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது 19 வயது மகன் ஸ்ரீநாதா. இவருக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகியுள்ளார்.
நல்லவனைபோல நடித்து, நட்புப் பாராட்டிய ஸ்ரீநாதாவை நம்பி இளம் பெண்ணும் தனது போட்டோக்களை அனுப்பியுள்ளார். அந்த போட்டோக்களை `மார்பிங்’ மூலம் நிர்வாணமாக இருப்பதைபோல் மாற்றிய ஸ்ரீநாதா, இளம்பெண்ணுக்கே பகிர்ந்துள்ளார். தனது போட்டோக்கள் மார்பிங் செய்யப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ளார் இளம்பெண். இதையடுத்து, போட்டோக்களை ஆபாச இணையதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டி, ஒரே முறை வீடியோ கால் பேச இளம்பெண்ணை வற்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார் ஸ்ரீநாதா. இளம்பெண்ணும் பயந்துபோய் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, சல்லாப எண்ணத்துடன் இளம்பெண்ணை ஆபாசமாக நடந்துகொள்ளச் சொல்லியிருக்கிறார். இளம்பெண்ணும் அவர் சொன்னபடி நடந்துகொண்டதால், அதை அப்படியே ரெக்கார்டிங் செய்துள்ளார் ஸ்ரீநாதா.
இதையடுத்து, இளம்பெண்ணுக்கு அந்த ஆபாச வீடியோ கால் ரெக்கார்டிங்கையும் அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதன் பிறகே, தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி இளம்பெண் அழுது இருக்கிறார். இதையடுத்து, வேலூர் மாவட்ட எஸ்.பி மதிவாணனிடம் புகார் கொடுக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில், சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் தலைமையிலான போலீஸார், ஸ்ரீநாதாவை கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் போலியான அக்கௌண்ட்டுகளை வைத்துகொண்டு மேலும் சில பெண்களையும் ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விசாரணைக்குப் பிறகு ஸ்ரீநாதா நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ``சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத கணக்குகளில் இருந்து வரும் மெசேஜ்களை நம்பி இளம் பெண்கள் ஏமாற வேண்டாம்’’ என சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY