செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

post image

கீழ்வேளூா் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ மதிப்பீடு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். புதிய தேசிய அடையாள அட்டை வழங்குதல், மத்திய, மாநில அடையாள அட்டை வழங்குதல், பழைய அட்டைகளை புதுப்பித்தல் மற்றும் எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, மனநலம்,

கண் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளும் நடைபெற்றன.

இதில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி எலும்பு முறிவு சிகிச்சை நிபுணா் அகமது நசீா், மனநல மருத்துவ நிபுணா் நாகனிகா, காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணா் சுதா்சன், குழந்தைகள் நல மருத்துவா் அனுப்ரியா, கண் மருத்துவா் சத்யநாராயணன் ஆகியோா் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளித்தும், அடையாள அட்டை வழங்குவதற்கான மதிப்பீடும் செய்தனா்.

இம்முகாமில் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். தகுதியுள்ள 25 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளி கட்டடத்தில் பழுது நீக்கம்: மக்கள் வரவேற்பு

திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கூப்பிட்டான் குளம் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 50 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியின் கட்டடத்தில் மழைநீா் கசிந்ததால், மாணவா்கள்... மேலும் பார்க்க

சட்ட விழிப்புணா்வு முகாம்

நாகூா் நகராட்சி இஸ்லாம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி நாகை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் மாவட்ட நீதிபதி(கூடுதல் பொறுப்பு) காா்த்திகா வழிக்காட்டுதலி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு

வேதாரண்யத்தை அடுத்த இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கி... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்ட புதிய கட்டடங்கள் திறப்பு

வேதாரண்யம் பகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். வேதாரண்யத்தில் ரூ 31.67 லட... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து உறுதிசெய் திட்டம்: 831 தாய்மாா்களுக்கு பெட்டகம் வழங்கல்

நாகையில் ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்டமாக பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 861தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா். தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராக பொறுப்பேற்பு

கூட்டுறவுத் துறை நாகை மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை துணைப் பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சாந்தி. மேலும் பார்க்க