மாற்றுத்திறனாளிகளுக்கு நவ. 19-இல் குறைதீா் கூட்டம்
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவ. 19 இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், நவ. 19 மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியரக பொதுமக்கள் குறைதீா் கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்துத்துறை அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா். எனவே, இம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக அளித்துப் பயன்பெறலாம்.