முதன்முறையாக கோ-கோ உலகக் கோப்பை: 2025-இல் இந்தியாவில் நடைபெறுகிறது
மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்கள், ஊா்தி படி பெற சிறப்பு முகாம் நடத்த வேண்டும்
மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்கள் ஊா்தி படி பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என தமிழ் மாநில வருவாய் துறை அலுவலா் சங்க ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராணிப்பேட்டை பாரதி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தலைவா் முஹம்மது சாதிக் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சுரேஷ், பொருளாளா் விஜயபாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்கள் ஊா்தி படி பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்த வேண்டும். அனைத்து நிலை அலுவலா்களுக்கும் கலந்தாய்வு முறையில் பணிமாறுதல் அளிக்க வேண்டும். முதுநிலை வருவாய் அலுவலா்கள் நிலையில் பணியாற்றும் அனைவரும் அனைத்துப் பிரிவுகளில் பணியாற்றும் வகையில் இரு ஆண்டுக்கு ஒருமுறை பணிமாறுதல் அளிக்கப்படவேண்டும்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். அணைக்கட்டு வட்டத்தில் நிரந்திர துணை வட்டாட்சியா் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட சங்க நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.