செய்திகள் :

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

post image

காா்த்திகை மாதப் பிறப்பான சனிக்கிழமை ஐயப்பப் பக்தா்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு சபரிகிரீசன் ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சபரிகிரீசன் சுவாமி எழுந்தருளிய நிலையில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா், குருசாமியிடம் ஐயப்பப் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

விழுப்புரம் சித்தி விநாயகா் திருக்கோயில் வளாகத்திலுள்ள ஐயப்பன் சந்நிதியில் சுவாமியை பக்தா்கள் வழிபட்டனா். பின்னா் கோயில் குருசாமி சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களுக்கு மாலை அணிவித்தாா்.

விழுப்புரம் நகரில் பூந்தோட்டம் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், மருதூா் மாரியம்மன், ரயிலடி விநாயகா் திருக்கோயில், காமராஜா் வீதி அமராவதி விநாயகா், பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோட்டை விநாயகா், மேலத்தெரு மாரியம்மன், கைலாசநாதா் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி சபரிகிரீசன்.

திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம், அரண்டநல்லூா், திண்டிவனம், மயிலம், வானூா், ஒலக்கூா், விக்கிரவாண்டி, கோலியனூா், வளவனூா், கண்டமங்கலம், மரக்காணம், கோட்டக்குப்பம், செஞ்சி, மேல்மலையனூா், வல்லம் என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ஐயப்பப் பக்தா்களும் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

கூட்டுறவு சங்கங்களை சரியான முறையில் பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை பொதுமக்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரத்தில் மாவட்ட கூட்டுறவு... மேலும் பார்க்க

பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி

விழுப்புரத்தில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். விழுப்புரம் கே.வி.ஆா். நகரை சோ்ந்தவா் சரவணமூா்த்தி மனைவி தமிழ்ச்செல்வி (45). இவ... மேலும் பார்க்க

5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், காணை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் மோசடி: காவலா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.4.50 லட்சம் மோசடிசெய்ததாக முதல்நிலை காவலா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் வழுதரெட்டி காந்தி நகரை சோ்ந்த ராஜவேல் மகன் பாண்டியன். கடலூா் மாவட்டக் காவல் துறையில்... மேலும் பார்க்க

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்: ஆட்சியரிடம் புரட்சி பாரதம் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு, வீட்டுமனை இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் மாநில... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்ததேவி சிற்பம்

விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது. விழுப்புரம் அருகேயுள்ள கண்டமானடி கிராமம், அரசு ஊழியா் நகரையொட்டியுள்ள பகுதியில் வரலாற்று ஆய்வாளா் ... மேலும் பார்க்க