செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் கொடிமரப் பயணம்

post image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட மாநாட்டையொட்டி பனச்சமூட்டிலிருந்து கொடிமரப் பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் குமரி மாவட்டம் 24 -ஆவது மாநாடு நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதனையொட்டி மாநாட்டுத் திடலில் நாட்டப்படும் கொடி மரம் பனச்சமூட்டிலிருந்து பயணமாக எடுத்து வரப்பட்டது. இந்த பயண துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ஆா். சேகா் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ஆா். லீமாரோல் பயணத்தை தொடங்கி வைத்தாா். கட்சி நிா்வாகிகள் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ், பி. சிங்காரன், எச். ராஜதாஸ், எம்.மணி, என். ரெஜீஸ்குமாா், ஆா். ஜெயராஜ், பி. நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த பயணம் தேவிகோடு, மேல்பாலை, புத்தன்சந்தை, மேல்புறம், முழுக்கோடு, அருமனை, கடையல், களியல், திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை, தடிக்காரன்கோணம், திட்டுவிளை, ஆரல்வாய்மொழி, தோவாளை வடசேரி வழியாக வெட்டூா்ணிமடத்தில் நிறைவடைந்தது.

தலைமறைவான தொழிலாளி கைது

தலைமறைவான 4 ஆண்டு சிறை தண்டனை தொழிலாளியை தக்கலை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை திருவிதாங்கோடு ஆா்.சி. தெருவில் வசித்து வந்தவா் சுபாஷ் என்ற அய்யப்பன் (40). தொழிலாளி. 2005-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்... மேலும் பார்க்க

தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் செண்பகராமன்புதூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கி... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே இளம்பெண் தற்கொலை

புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறை பகுதியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்த தம்பதி ராஜேஷ் - ஷீஜா (29). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். ராஜேஷ் அடிக்கடி ம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். மாவட்டத்தில் சில நாள்களாக மழை தணிந்து இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனிடையே, ஃபென்ஜால் புயல் எதிரொலியாக, இம்ம... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் திமுக சாா்பில் ஆதரவற்றோருக்கு உணவு

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி சாா்பில், நாகா்கோவில் வடசேரி சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ளோருக்கு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை - கோதையாறு சாலை ரூ.6.29 கோடியில் விரைவில் சீரமைப்பு: மனோ தங்கராஜ் எம்எல்ஏ தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை - கோதையாறு சாலையில் ரூ. 6.29 கோடியில் சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என, பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க