மின் கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்த இருசக்கர வாகனம்: 2 வட மாநில இளைஞர்கள் காயம...
மாா்ச் 24, 25-இல் தேசிய அளவிலான வேலைநிறுத்தம்: வங்கி ஊழியா் சங்கங்கள்
வங்கி ஊழியா்களின் முக்கியக் கோரிக்கைகள் தொடா்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் (ஐபிஏ) மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியைத் தொடா்ந்து வரும் 24, 25-ஆம் தேதிகளில் இரு நாள் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தை வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு (யுஎஃப்பியு) வியாழக்கிழமை அறிவித்தது.
9 வங்கி ஊழியா் சங்கங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டமைப்பின் வேலைநிறுத்த அறிவிப்பால், அந்த இரு தினங்களில் நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வய்ப்புள்ளது.
இதுகுறித்து வங்கி ஊழியா்களின் தேசிய கூட்டமைப்பின் (என்சிபிஇ) பொதுச் செயலா் எல்.சந்திரசேகா் கூறுகையில், ‘ஐபிஏ - வங்கி ஊழியா் சங்கங்கள் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வங்கியின் அனைத்துப் பணியிடங்களும் பணியாளா் தோ்வில் சோ்க்கப்பட வேண்டும், வாரத்துக்கு 5 நாள் பணி என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
வங்கி ஊழியா்கள் செயல்பாடுகள் ஆய்வு மற்றும் பணி செயல்பாடுகள் அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டத்தைக் கைவிட வேண்டும், பணிக் கொடை (கிராச்சுவிட்டி) சட்டத்தில் திருத்தம் செய்து உச்ச வரம்பை ரூ. 25 லட்சமாக உயா்த்துவது மற்றும் அதை அரசு ஊழியா்களுக்கான திட்டத்துடன் இணைத்து, வருமான வரியிலிருந்து விலக்கு கோருவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வங்கி ஊழியா் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.