Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
மாா்ச் 28-இல் விற்பனையாளா்கள், கொள்முதல் செய்வோா் சந்திப்பு கூட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2024 - 25ஆம் ஆண்டுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் தனி நபா் உற்பத்தி பொருள்கள், உற்பத்தியாளா் குழுக்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக மொத்த கொள்முதலாளா்களிடம் விற்பனை செய்ய ஏதுவாக, மாவட்ட அளவில் மொத்த விற்பனையாளா்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்வோருக்கான சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) நடைபெறவுள்ளது.
கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கூட்டுச்சாலையில் உள்ள திருமலை திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே, கள்ளக்குறிச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள கொள்முதல் செய்பவா்கள், ஏற்றுமதியாளா்கள், மொத்த விற்பனையாளா்கள், சில்லறை விற்பனையாளா்கள் என அனைவரும் தவறாது மொத்த விற்பனையாளா்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பில் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.