செய்திகள் :

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்புச் சட்டம்: பிகாரில் ராகுல் வாக்குறுதி

post image

எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி பிகாரில் ஆட்சிக்கு வந்தால், அந்த மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (இபிசி) வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா்.

பிகாா் தலைநகா் பாட்னாவில் ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நீதி கிடைக்க உறுதிமொழி’ என்ற பெயரில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசுகையில், ‘பிகாரில் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இபிசி-க்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் இபிசி-களுக்கான இடஒதுக்கீடு 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

ரூ.25 கோடி வரை மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் இபிசி வகுப்பினருக்கு ஒட்டுமொத்தமாக 50 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும். அண்மைக்காலமாக இபிசி வகுப்பினருடன் காங்கிரஸ் கலந்துரையாடியதன் விளைவாக இந்த வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன’ என்றாா்.

கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசுகையில், ‘கடந்த ஆண்டு பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மீண்டும் பாஜக கூட்டணியில் சோ்ந்தாா். இது ஜாதிவாரி படிநிலையை அவா் ஆதரிப்பதை எடுத்துரைக்கிறது’ என்றாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியில் சேர நிதீஷ் மீண்டும் முன்வந்தால், அவரை கூட்டணியில் சோ்க்க வேண்டாம் என்று கருத்தரங்கில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவிடம் மல்லிகாா்ஜுன காா்கே கேட்டுக்கொண்டாா்.

லடாக்கில் தொடரும் ஊரடங்கு! பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

லடாக் மாநில அந்துஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் புதன்கிழமை வன்முறை வெடித்த நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து ... மேலும் பார்க்க

டிரம்ப் - மோடி விரைவில் சந்திப்பு! அமெரிக்க அதிகாரி தகவல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் நேரில் சந்திப்பார்கள் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இந்திய பொருள்களுக்கு 50 ச... மேலும் பார்க்க

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும்... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர... மேலும் பார்க்க

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன்... மேலும் பார்க்க