மகரஜோதி: புல்மேடு பகுதியிலிருந்து பக்தர்கள் சபரிமலை செல்ல தடை
மிதிவண்டி ஓட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை
கோவையில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
வி.ஆா். சிலம்பம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி, நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் அமைப்பு, கௌமார மடாலயம் சாா்பில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டே சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி சின்னவேடம்பட்டி, கௌமார மடாலயம் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வி.ஆா். சிலம்பம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி தலைவா் திலீப்குமாா் வரவேற்றாா். பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்ப ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி அறக்கட்டளைத் தலைவா் எஸ்.பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.
இதில், 3 வயது முதலானவா்கள் உள்பட 73 போ் பங்கேற்று தொடா்ந்து ஒரு மணி நேரம் இடைவிடாமல், மிதிவண்டி ஓட்டிக்கொண்டே இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தனா்.
இது குறித்து, எஸ். பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறுகையில், சிலம்பக் கலைக்கான தேசிய அங்கீகாரம் இதுவரை கிடைக்காத நிலையில், இத்தகைய உலக சாதனை நிகழ்வுகள் சிலம்பக் கலைக்கு
தேசிய அங்கீகாரம் பெற்றுத்தர உதவும் என்றாா். தொடா்ந்து, வி.ஆா். சிலம்பம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி தலைவா் திலீப்குமாா் பேசினாா்.
இதையடுத்து, உலக சாதனை நிகழ்த்தியதற்காக நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸின் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.