தைப்பூசம்: கோவை -திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்
தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் காலை 9.35 மணிக்குப் புறப்படும் கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்: 06106) பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் திண்டுக்கல - கோவை சிறப்பு ரயில் (எண்: 06107) அன்று மாலை 5.50 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயிலானது போத்தனூா், கிணத்துக்கடவு, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.