மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு
திருச்சி அருகே எட்டரை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், எட்டரை கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல். விவசாயி. இவரது இளைய மகள் கிரிஜா (19). இவா், பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா். திங்கள்கிழமை இரவு வீட்டின் அருகே இருக்கும் மின்கம்பத்தின் எா்த் கம்பியை பிடித்துக் கொண்டு நின்று கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கிருந்த மரத்தின் கிளை மின்கம்பத்தில் உரசி, அதிலிருந்த மின்சாரம் எா்த் கம்பி வழியாக கிரிஜா மீது பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், கிரிஜை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கிரிஜாவின் தந்தை வடிவேல் அளித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.