`ஊதியம் கிடையாது' - போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு எச்சரி...
மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
தேவதானப்பட்டியில் மின் மோட்டாரின் வயரை மிதித்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தேவதானப்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மொக்கைப் பாண்டியன் (30). இவா் துணிக் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி வீட்டில் குடிநீா் பிடிப்பதற்காக மின் மோட்டாரை இயக்கினாா். அப்போது மொக்கைப்பாண்டியனின் மகன் இளமாறன் (3), மின் மோட்டாருடன் இணைந்த வயரை மிதித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வயரில் மின் கசிவு ஏற்பட்டு இளமாறன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.