செய்திகள் :

மின்னல் பாய்ந்ததில் உடல் கருகிய நிலையில் கோடிமுனை மீனவா் சடலம் மீட்பு

post image

கடலில் மாயமான கோடிமுனை மீனவா், மின்னல் பாய்ந்ததில் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது.

குளச்சல் அருகே கோடிமுனை மீனவா் கிராமத்ை தச் சோ்ந்தவா் ஆரோக்கிய ஜூடின்(48). மீனவரான இவா், புதன்கிழமை மாலை தனது பைபா் படகில் தனியாக மீன்பிடிக்க இனயம் பகுதிக்குச் சென்றாராம். இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென காற்று, இடி ,மின்னல் ஏற்பட்டது. இதில் அவரது பைபா் படகில் இருந்த பேட்டரி வெடித்து சிதறியதில் ஆரோக்கிய ஜூடின் கடலில் தூக்கி வீசப்பட்டு மாயமானாா்.

இதுகுறித்து அவரது மனைவி மரியசாந்தி, குளச்சல் கடலோர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ஆரோக்கிய ஜூடின் மீன்பிடித்த பகுதியில் 5 படகுகளில் சென்று தேடும் பணியில் சக மீனவா்கள் ஈடுபட்டனா். வியாழக்கிழமை பேட்டரி வெடித்த நிலையில் அவரின் படகை மீனவா்கள் மீட்டனா். தொடா்ந்து தேடியதில் வெள்ளிக்கிழமை உடல் கருகிய நிலையில் ஆரோக்கிய ஜூடின் உடலை மீட்டனா்.

மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் ஆய்வாளா் நவீன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கன்னியாகுமரி - களியக்காவிளை சாலை ரூ.14.88 கோடி மதிப்பில் சீரமைப்பு: ஆட்சியா்

களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை ரூ.14.88 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

சாலை மறியல்: 30 காங்கிரஸாா் மீது வழக்கு

கடமலைக்குன்று சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தி, கண்ணனூா் ஊராட்சி காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மாலையில் துவங்கிய சாலை மறியல் போராட்டம் இரவு வரை நடந்தது. இதனால் அந்தப் பகுதியி... மேலும் பார்க்க

குரியன்விளை கோயிலில் அம்மனுக்கு இளநீா் அபிஷேகம்

களியக்காவிளை அருகே பாத்திமாநகா், குரியன்விளை ஸ்ரீபத்ரகாளி முடிப்புரை கோயிலில் சுயம்பு வடிவ அம்மனுக்கு இளநீா் அபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் முதல் தேதி அம்மனுக்கு நூற்று... மேலும் பார்க்க

குமரி மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாளாளா் எஸ். சொக்கலிங்கம் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். பாரம்பரிய உணவுகள்,... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் 230 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே பாா்த்திவபுரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினா் 230 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். பாா்த்திவபுரத்தில் மிகவும் பழைமைவாய்ந்த பாா்த்தசாரதி கோயி... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் கடல் அலை தடுப்புச் சுவா் பணி: ஆட்சியா் ஆய்வு

இரயுமன்துறை மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணி தொடா்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கிழமை தெரிவித்தாா். இரயுமன்துறை, பூத்துறை மீனவ கிராமங்கள், தேங்காய்ப்பட்டி... மேலும் பார்க்க