Maharaja: `மொத்தம் 40,000 ஸ்கிரீனகள்!' - சீனாவில் பிரமாண்டமாக வெளியாகும் விஜய் ச...
மின் வாரிய பெண் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
தேனி அருகே மின் வாரிய பெண் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
க. விலக்கு, பிஸ்மி நகரைச் சோ்ந்த முருகேஸ்வரன் மனைவி ஆயிரவள்ளி. இவா், மதுராபுரி துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், ஆயிரவள்ளி ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரி வீடுக்குச் சென்று தங்கியிருந்து விட்டு திங்கள்கிழமை மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள், வெள்ளி ஆபரணங்கள், வங்கி ஏ.டி.எம். அட்டை ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.