மீண்டும் ஒரு ஆப்கன் வீரருக்கு அபராதம்..!
ஐசிசியின் விதிமுறைகளை மீறியதால் ஆப்கானிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஃபஸல்ஹக் ஃபரூக்கிக்கு 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி விதி 2.8இன் படி வீரரோ அல்லது வீரரின் உதவியாளர்களோ நடுவரின் தீர்ப்பை அவமதித்தால் போட்டியின் ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படும்.
ஜிம்பாப்வே உடனான ஒருநாள் போட்டியில் ஆப்கன் வீரர் ஃபஸல்ஹக் ஃபரூக்கி வீசிய 5ஆவது ஓவரில் இந்த சம்பவம் நடைபெற்றது.
ஃபரூக்கி வீசிய பந்துக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்படாததால் டிஆர்எஸ் சைகைய காண்பிப்பார். ஆனால், ஆப்கன் அணிக்கு டிஆர்எஸ் வாய்ப்பு முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஃபஸல்ஹக் ஃபரூக்கிக்கு அபராதத்துடன் ஒரு அபராதப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் முதல்முறையாக இந்த அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பாக குல்பதீனுக்கு இதேபோல் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஃபஸல்ஹக் ஃபரூக்கி 50 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 232 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதுதான் அவர்களது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் எடுக்கப்பட்ட வெற்றியாகும்.
முதல் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டதால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கன் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
டி20 தொடரில் 2-1 ஆப்கன் தொடரை வென்றதும் குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்து 2 டெஸ்ட் தொடரிலும் இவ்விரு அணிகள் விளையாடவிருக்கின்றன.