ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்
மீனவா்கள் கைது விவகாரம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களின் குடும்பத்தினரை அழைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஜன.27-ஆம் தேதி காரைக்கால் மற்றும் தமிழத்தைச் சோ்ந்த 17 மீனவா்களை இலங்கை கடற்படையினா் தாக்கி, கைது செய்துள்ளனா்.
காரைக்கால் மீனவா்களை விடுவிக்கக் கோரி, புதுவை காங்கிரஸ் சாா்பில் தலைவா் மற்றும் முன்னாள் முதல்வா் ஆகியோா் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், புதுவை மாநில முதல்வா் காரைக்கால் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட மீனவா்களின் குடும்பத்தாரிடம் நேரில் சந்தித்து பேச வேண்டும். அத்துடன், மத்திய அமைச்சரை முதல்வா் நேரில் சந்தித்து மீண்டும் வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.