அப்பாவின் கனவை நிறைவேற்றப் பிறந்த தேவதை; பிரதிகா எனும் போராட்டக்காரி சாதித்த கதை
முதல்முறையாக சந்தித்துகொள்ளும் ட்ரம்ப், ஜின்பிங்: ஏன் இது முக்கியம்? இருவரின் எதிர்பார்ப்புகள் என்ன?
தென் கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தற்போது நடந்து வருகிறது.
தான் முதல்முறையாக அமெரிக்க அதிபராக இருந்தபோது ஜின்பிங்கை சந்தித்த ட்ரம்ப், இப்போது தான் மீண்டும் அவரை சந்திக்கிறார்.
நாளை தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள சென்ற இடத்தில் தான் ட்ரம்ப், ஜின்பிங் சந்திப்பு நடந்து வருகிறது.
இந்த இருவரின் சந்திப்பு அமெரிக்கா, சீனாவிற்கு மட்டும் முக்கியமானது அல்ல, உலக நாடுகள் அனைத்துக்குமே ஏதோ ஒரு விதத்தில் மிக முக்கியமானது.

ஏன் முக்கியம்?
சமீபத்தில் சீனா தான் ஏற்றுமதி செய்யும் சில அரிய கனிமங்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. 'இது உலகளாவிய வர்த்தகத்தைப் பாதிக்கும்' என்று சீனப் பொருள்களின் மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்தார் ட்ரம்ப். இதை சீனா கடுமையாக எதிர்த்தது.
இந்த நிலையில் தான், இந்தச் சந்திப்பு நடந்து வருகிறது.
எதிர்பார்ப்புகள்
இந்தச் சந்திப்பில் ட்ரம்பின் எதிர்பார்ப்பு, அமெரிக்காவின் சோயா பீன்ஸை சீனா வாங்க வேண்டும் என்பதாக இருக்கிறது. ஜின்பிங் சீனா மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
முக்கியமாக, இருவருமே வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னோக்கி உள்ளனர்.
இவை அனைத்தும் நிறைவேறுமா என்று இன்னும் சில மணிநேரத்தில் தெரிந்துவிடும்.














