உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை எதும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மருந்துகள் பற்றாக்குறை இல்லை முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான ஜெனரிக் மருந்து விற்பனைக்கு வந்துள்ளது. மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக மருந்துகள் கொள்முதல் செய்து தரப்படுகிறது.
இதைத் தாண்டி தேவைப்படும் ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் உள்ளிட்ட பொருட்களை கடை நடத்துபவர்கள் அல்லது தனியார் மருத்தகம் நடத்தும் உரிமையாளர்கள் வாங்கி பெற்றுக் கொள்ளலாம் என்பது போன்ற உத்தரவை கூட்டுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. முதல்வர் மருத்தகத்தில் 75 % மருத்துகள் விலை குறைவாக தான் விற்பனை செய்யப்படுகிறது.
'திருமணமாகி 10 மாதம் கழித்துதான் குழந்தை பிறக்கும்' - திமுக எம்.பி. சர்ச்சைப் பேச்சு!
தற்போது வெறும் 206 வகையான ஜெனரிக் மருந்து மட்டுமே விற்பனை செய்யப்படுதால் அது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மேலும் இதில் மற்ற மருத்துகளை விற்பனை செய்ய கூட்டுறவு துறையிடம் பேசி வருகிறோம். எனவே, முதல்வர் மருத்தகத்தில் போதுமான அளவுகள் மருத்துகள் கையிருப்பில் உள்ளன.
ஆறு மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று கோரிக்கை தொடர்ந்து முதல்வர் சார்பாக வைத்து வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறோம். வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் நிச்சயம் தமிழ்நாட்டில் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் வரும் என்றார்.