செய்திகள் :

முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா? - தமிழிசை சௌந்தரராஜன்

post image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 14) காலை தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

இதையும் படிக்க |  தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளது திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு

மேலும், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் கடந்த ஆண்டுகளில் ரூபாய் குறியீடு(₹) இடம்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு அதற்குப் பதிலாக 'ரூ' என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.

தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இலச்சினையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை திமுக அரசு மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க | முதல்முறையாக ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை'யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இதனைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவரும் தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும். திமுக அரசின் தோல்விகளை மறைக்க அவர்கள் போடும் நாடகம் தொடர்கிறது.

தமிழ்நாட்டை எத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளார்கள்? இப்போது ஏன் ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளார்கள்?

திமுக எப்போதும் பிரிவினைவாதத்தையே பேசுகிறது. தேச விரோத மனநிலையுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!

ஹிஜாப் விவகாரத்தில் செயலி, சிசிடிவி, டிரோன் மூலம் கண்காணிக்கும் அரசு: ஐநா அறிக்கை!

ஹிஜாப் விவகாரத்தில் அந்நாட்டுப் பெண்களை நவீன முறைகளில் ஈரான் அரசு கண்காணிப்பதாக ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் பெண்கள் கட்டாயம் தலையை மறைத்து ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது... மேலும் பார்க்க

ரூபாய் குறியீடு நீக்கம்: கருணாநிதி உருவம் பொறித்த நாணயங்களை திமுக வீசி எறிந்துவிடுமா? - அன்புமணி

தமிழக நிதிநிலை அறிக்கை இலச்சினையை ரூபாய் குறியீட்டை திமுக அரசு நீக்கியுள்ளதற்கு, கருணாநிதி உருவம் பொறித்த நாணயங்களை திமுக வீசி எறிந்துவிடுமா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்த செங்கோட்டையன்!

சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கும்முன் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் ... மேலும் பார்க்க

ரூ.3,796 கோடி நிதியை நிலுவை: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம் தொடர்ச்சியாக மிக அதிக அளவில் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், 2016-17 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

தொழில்முனைவோர்களாக 1 லட்சம் மகளிர்: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோர்களாக்க உயர்த்திட பெருந்திட்டம் செயல்படு... மேலும் பார்க்க

தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: துறைகள் வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு செய்தார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைம... மேலும் பார்க்க