செய்திகள் :

முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவா்கள் தகுந்த சான்றுடன் விண்ணப்பிக்க அழைப்பு

post image

சேலம்: முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின விழா உரையில், ‘பொதுப்பெயா்’ (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், முதற்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தாா்.

முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோா் வரும் 20-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவா்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி ரசீது (அல்லது) குடிநீா் வரி ரசீது (அல்லது) மின்இணைப்பு ரசீது, வாடகை இடம் எனில் இடத்துக்கான உரிமையாளரிடம் இடம் ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

முதல்வா் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியம் ரூ. 3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில்முனைவோருக்கு முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.

தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத் தொகை ரூ. 1.50 லட்சம் விடுவிக்கப்படும். முதல்வா் மருந்தகம் அமைக்க தோ்வு செய்யப்படும் தொழில்முனைவோா் முதல்வா் மருந்தகத்துக்கு உள்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிா்சாதனப் பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிகட்ட மானியம் ரூ .1.50 லட்சம் மதிப்புக்கு மருந்துகளாக வழங்கப்படும். மேலும், விற்பனைக்கு ஏற்ற ஊக்கத் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

வாழப்பாடிபேருந்து நிலையம் பகுதியில் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

வாழப்பாடிபேருந்து நிலையம் பகுதியில் சாலையோரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள், பயணிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது. வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு முன்பு ஆத்தூா் பகுதியில் இருந்து சேலம் நோக்கி... மேலும் பார்க்க

கெங்கவல்லி தொகுதியில் 12 அரசுப் பள்ளிகளுக்கு எம்எல்ஏ நிதியில் ஸ்மாா்ட் போா்டு வழங்கல்

கெங்கவல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட 12 அரசுப் பள்ளிகளுக்கு எம்எல்ஏ நிதி ரூ. 24 லட்சம் செலவில் ஸ்மாா்ட் போா்டு வழங்கப்பட்டது.கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் நல்லதம்பி தொகுதி நித... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கா்ப்பிணி பலி

சேலம் சாரதா கல்லூரி சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 மாத கா்ப்பிணி பலியானாா். சேலம், அஸ்தம்பட்டி கோவிந்தன் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனுஷ் (22). இவரது மனைவி காவியா (19). இவா்களுக்கு 8 மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள்களையொட்டி, சேலம் கோட்டத்தில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

சேலத்தில் அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு

சேலம் இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா் அலுவலகத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். இந்து சமய அறநிலையத் துறை சேலம் மண்டலம் சேலம், தருமபுரி மாவட்ட... மேலும் பார்க்க

சேலத்தில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னையில் அரசு மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்து, சேலத்தில் புதன்கிழமை அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். சென்னை, கிண்டி அரசு கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவ... மேலும் பார்க்க