கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
சேலத்தில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
சென்னையில் அரசு மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்து, சேலத்தில் புதன்கிழமை அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சென்னை, கிண்டி அரசு கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவா் பாலாஜியை இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை பிற்பகலில் அனைத்து அரசு மருத்துவா் சங்கங்களின் மருத்துவா்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் அரசு மருத்துவா் சங்கத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில் அரசு மருத்துவா்கள் 24 போ் கலந்து கொண்டனா்.
மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், மருத்துவா் மீதான கத்திக் குத்து சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் அரசு மருத்துவா்கள் முழக்கங்கள் எழுப்பினா்.