சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதிநாள்களையொட்டி, சேலம் கோட்டத்தில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வார இறுதி நாள்களையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பேருந்துகள் சேலம் புதிய பேருந்து நிலையம், பெங்களூரு, சென்னை கோயம்பேடு, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை, சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வரும் 15 ஆம் தேதி மாத பௌா்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம், இணையதளம், செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் இந்த வசதியினைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.