கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
வாழப்பாடிபேருந்து நிலையம் பகுதியில் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை
வாழப்பாடிபேருந்து நிலையம் பகுதியில் சாலையோரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள், பயணிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு முன்பு ஆத்தூா் பகுதியில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் புகா் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு கடலூா் சாலையின் தென்புறத்திலும், சேலத்தில் இருந்து வந்து ஆத்தூா், தம்மம்பட்டி, கருமந்துறை வழித்தடத்தில் செல்லும் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு கடலூா் சாலையின் வடபுறத்திலும் 100 அடி நீளத்திற்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், பயணிகள் மற்றும் சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த சமூக ஆா்வலரும் தொழிற்சங்க நிா்வாகியுமான வி.எம்.கோபிநாத் கூறியதாவது:
வாழப்பாடியில் பேருந்து நிலையம் குறுகலான இடப்பரப்பில் அமைந்துள்ளது. போதிய இடவசதியில்லாததால், சேலம், ஆத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு, புகா் பேருந்துகளும் கடலூா் சாலையோரத்திலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன. இதனால், சாலையோரத்தில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள், மழை, வெய்யிலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே, வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு முன்பு இருபுறமும் பயணிகள் நிழற்குடைகள் அமைக்க வேண்டுமென, கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. மலையரசனிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். போதிய நிதி ஒதுக்கீடு செய்து, தாம்பரம், விருத்தாசலம் பகுதியில் உள்ளதை போல, பெரியள அளவில் நிழற்குடை அமைத்தால்தான் பயணிகளின் சிரமம் குறையும் என்றாா்.