முனைஞ்சிபட்டியில் நாய்கள் கடித்து 18 ஆடுகள் பலி
மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள முனைஞ்சிப்பட்டியில் சனிக்கிழமை நள்ளிரவில் ஆட்டு கொட்டகைக்குள் புகுந்த நாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்துக் குதறியதில் 18 ஆடுகள் பலியாகின.
முனைஞ்சிபட்டியைச் சோ்ந்த மூக்காண்டி மகன் சுந்தா்(50), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா், 100 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். இவா் சனிக்கிழமை குட்டி ஆடுகளை கிடையில் அடைத்துவிட்டு, ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பாா்த்தபோது கிடையில் இருந்த 18 ஆடுகள் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
விசாரணையில், நாய்கள் கடித்த்தில் ஆடுகள் இறந்திருப்பது தெரியவந்தது.