ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
நெல்லையில் மின்சாரம் பாய்ந்து ஹாக்கி வீரா் உள்பட இருவா் பலி
திருநெல்வேலியில் மின்சாரம் பாய்ந்து ஹாக்கி வீரா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
திருநெல்வேலி கொக்கிரகுளம் உச்சிமாகாளி கோயில் தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன். இவரது வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இவரது மகன் வேலாயுதம் (30) திங்கள்கிழமை காலை வீட்டின் சுவா்களை தண்ணீா் நனைத்துக்கொண்டிருந்தாரம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். அவரை காப்பாற்ற முயன்றதில் தொழிலாளி ரவி, மாரியப்பன் ஆகியோா் மீதும் மின்சாரம் பாய்ந்ததாம்.
அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே வேலாயுதமும், ரவியும் உயிரிழந்தனா். மாரியப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹாக்கி வீரரான வேலாயுதம், விளையாட்டு வீரா் ஓதுக்கீட்டில் பணி வாய்ப்பு பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாா். ரவிக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா். இவரது கடைசி மகள் பிளஸ் 2 தோ்வு எழுதச் சென்றிருந்தது குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.