மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவாரத்தில் இரண்டாவது சம்பவம்
மும்பை உயர் நீதிமன்றத்திற்கு ஒருவாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் ஒன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தது. அதில் உடனடியாக குண்டு வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படை தீவிர சோதனையில் இறங்கினர்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். பின்னர் வழக்கமான அட்டவணையின்படி நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. கடந்த ஒரு வாரத்தில் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து வந்த இரண்டாவது மின்னஞ்சல் இதுவாகும்.
முன்னதாக செப்டம்பர் 12 ஆம் தேதி இதேபோன்று மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. இரண்டு மிரட்டல்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்திற்திற்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.