செய்திகள் :

மும்பை படகு விபத்து: மீட்கப்பட்ட கேரள சிறுவனின் பெற்றோர் மாயம்!

post image

மும்பை கடல்பகுதியில் பயணிகள் படகு மீது இந்திய கடற்படை படகு மோதியதில் மீட்கப்பட்ட கேரள சிறுவனின் பெற்றோர் நிலை குறித்து தகவல்கள் தெரியவரவில்லை.

கேரளத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன், படகு விபத்தில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவனது பெற்றோர் குறித்து அங்கிருப்பவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பது பார்ப்பவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மும்பைக்கு தனது பெற்றோருடன் ஊர் சுற்றிப் பார்க்க கேரளத்தில் இருந்து வந்த போது, படகு விபத்தில் சிக்கியதாக சிறுவன் கூறியிருக்கிறார். ஆனால், இதுவரை அவரது பெற்றோர் என்ன ஆனார்கள் என்பது குறித்து விவரம் தெரியவில்லை.

மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது.

இதில் கடற்படை வீரா் ஒருவா் உள்பட 13 போ் உயிரிழந்தனா். 99 போ் மீட்கப்பட்டனா் என்று மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்திருந்தார்.

‘நீல்கமல்’ எனும் சுற்றுலாப் பயணிகள் படகு நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 5 பணியாளா்களுடன் மும்பைக்கு அருகிலுள்ள பிரபல சுற்றுலா தலமான ‘எலிபெண்டா’ தீவுகளுக்குச் சென்று கொண்டிருந்தது.

அப்போது, பயணிகள் படகு அருகே வட்டமிட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படையைச் சோ்ந்து அதிவேகப் படகு கட்டுப்பாட்டை இழந்து, பயணிகள் படகின் மீது மோதியது. இதில் நீல்கமல் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இரவு 7.30 மணி நிலவரப்படி, இந்த விபத்தில் கடற்படை வீரா் ஒருவா் உள்பட 13 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் சிக்கித் தவித்த 99 போ் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டனா். மீட்கப்பட்டவர்கள் உரானில் உள்ள ஜேஎன்பிடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11 கடற்படை படகுகள், மூன்று கடல்சாா் காவல் படகுகள், ஒரு கடலோர காவல் படை படகு மற்றும் நான்கு ஹெலிகாப்டா்கள் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. காவல் துறையினா், ஜவாஹா்லால் நேரு துறைமுக ஆணைய ஊழியா்கள் மற்றும் உள்ளூா் மீனவா்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவினா்.

2025-ல் எந்தப் பங்குகளை வாங்கலாம்? ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் பரிந்துரைக்கும் 28% லாபம் தரும் பங்குகள்!

அடுத்தாண்டில் 28 சதவிகிதம் வரையில் லாபம் தரும் வாங்குவதற்கு உகந்த பங்குகளாக சில பங்குகளை ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் பரிந்துரைத்துள்ளது.நடப்பாண்டின் இரண்டாம் பாதி பங்குச் சந்தைக்கு சாதகமாக இல்லாதவிடினும், ... மேலும் பார்க்க

ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல்: காங்கிரஸ் புகார்!

ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்க... மேலும் பார்க்க

ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

மாநிலங்களவையின் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.மாநிலங்களவையி... மேலும் பார்க்க

ஜனநாயகத்தில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை: ஒடிசா முதல்வர்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொறுப்பற்ற, ஆட்சேபனையற்ற நடத்தையால் பாஜகவின் எம்பி காயமடைந்துள்ளதாக ஒடிசா முதல்வர் சரண் மாஜீ தெரிவித்தார். இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் கூறுகையில்,நாடாளுமன்றத்தில் இன்... மேலும் பார்க்க

மொத்த வருமானமே ரூ.3.5 கோடி, ஐஏஎஸ் அதிகாரி வீட்டின் மதிப்போ ரூ.9.6 கோடி!

பிகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஹன்ஸ் தற்போது அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். இவர் தொடர்பான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பிகார் மாநிலம் பாட்ன... மேலும் பார்க்க

ராகுலுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் தீர்மானம்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தீர்மானம் கொண்டு வந்தார்.நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை காலை அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும்... மேலும் பார்க்க