செய்திகள் :

முல்லை பெரியாறு: ``வெடிகுண்டு புரளி, கேரள அரசின் சதி; ராணுவத்தை நிறுத்தணும்'' விவசாயிகள் கண்டனம்

post image

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் ‘கேரள அரசின் சதி’ என்று பெரியாறு வைகை பாசன சங்கத்தினர் கூறியதோடு அதற்கு கண்டனம் தெரிவித்து, கம்பத்தில் உள்ள விவசாயிகள் சங்க அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

 பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர்
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர்

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கும் பகுதி யாரும் நுழைய முடியாத புலிகள் காப்பகப் பகுதி. இந்தப் பகுதிக்குள் எவ்வாறு வெடிகுண்டு எடுத்துச் சென்றிருப்பார்கள் என்று சிந்திக்காமல் கேரள அரசு அணையைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதற்காகவே இவ்வாறு புரளியைக் கிளப்பி உள்ளது.

இது முழுக்க முழுக்க கேரள அரசின் சதி செயல். தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரைக் குடிக்கும் 5 மாவட்டங்களில், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை முல்லைப் பெரியாறு அணைக்காக நாடாளுமன்றத்தில் பேசியதாகத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவே செயல்படுகிறது.

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணையில் உள்ள காவலர்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு துணை ராணுவத்தை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 26 ஆம் தேதி கம்பத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்கின்றனர்” என்று அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.

`பொண்டாட்டிகளையும் இலவசமாக தருவார்கள் என்கிறார்!’- சி.வி.சண்முகத்தை வறுத்தெடுத்த அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு அருவருக்கத்தக்க ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் ... மேலும் பார்க்க

மும்பையில் கடும் போக்குவரத்து நெருக்கடி; உணவு, தண்ணீர் இல்லாமல் 12 மணி நேரம் சிக்கிய 500 மாணவர்கள்

மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: "முரணான தகவல்கள், திட்டமிட்டு செய்திருக்கின்றனர்" - பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக சட்ட மன்றத்தில் இன்று பிறவிவாதங்களை ஒதுக்கி கரூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அதை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டாலும் எடப்ப... மேலும் பார்க்க

டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலின் டாப் 10 இடங்களில் இருந்து அமெரிக்காவின் பாஸ்போர்ட் கீழிறங்கியுள்ளது.சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எப்படி நிர்ணயிக்கப்படும்? குற... மேலும் பார்க்க

சட்டசபை: ``எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க'' - எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.15) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் அசம்பாவிதம் தொடர்பாக விளக்கம் அளித்தார். கூட்டத்தொடர் முடிந்தபிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: விகடன் செய்தி எதிரொலி; பள்ளியில் ஆண்களுக்கு தனி கழிவறை அமைக்க நிதி ஒதுக்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952-ல் தொடக்கபள்ளி ஒன்று தொடங்கப்பட்டு, அன்று முதல் இன்று வரை அப்பகுதி மக்களின் தொடக்கல்வியின் தேவையை பூர்த்தி செய்து வர... மேலும் பார்க்க