செய்திகள் :

"வெற்றிமாறன் சார் நினைச்சிருந்தா VoiceOver மட்டும் கொடுத்துட்டு போயிருக்கலாம்; ஆனால்"- ஹரிஷ் கல்யாண்

post image

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.

இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.14) நடைபெற்றிருக்கிறது.

டீசல் படத்தில்...
டீசல் படத்தில்...

இதில் கலந்துகொண்டு பேசிய ஹரிஷ் கல்யாண், "வெற்றிமாறன் சாருக்கு எவ்வளவு கோடி நன்றி சொன்னாலும் பத்தாது. 'டீசல்' டீம் சார்பாகவும், என் சார்பாகவும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

ஏன்னா இந்தப் படத்துக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்காரு. படத்தைப் பத்தி சுருக்கமாகச் சொல்கிற மாதிரியான ஒரு வாய்ஸ் ஓவர் இருக்கு. அதை வெற்றிமாறன் சார் பேசினால் நல்லா இருக்கும்.

அது ஆடியன்ஸுக்கு கரெக்ட்டா போய்ச் சேரும் என்ற நம்பிக்கையில் அவர் கிட்ட கேட்டோம். 'முதல்ல படத்தைப் பார்க்கணும் அப்புறம்தான் என்னால வாய்ஸ் ஓவர் பேச முடியும்'னு சொன்னாரு.

அவர் நினைச்சிருந்தா அரை மணி நேரத்துல வாய்ஸ் ஓவர் கொடுத்திட்டு போயிருக்கலாம்.

ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண்

ஏன்னா அவரும் அடுத்தடுத்த படைப்புகளுக்காக ரெடி ஆகிட்டு இருக்காரு. ஆனா அவர் டைம் எடுத்து படத்தைப் பார்த்து சில Suggestions கொடுத்தாரு. அதைச் சில பேர் சமூக வலைத்தளங்களில், 'வெற்றிமாறன் சார் படத்தைப் பார்த்தாராம்.

அவருடைய அசிஸ்டன்ட்தான் இந்தப் படத்தோட டைரக்டராம் அப்படி'னு நிறைய பதிவிட்டிருந்தாங்க. ஆனா இந்தப் படத்தோட டைரக்டருக்கும், வெற்றிமாறன் சாருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று பேசியிருக்கிறார்.

Diesel: "இந்த சினிமாவில நம்மள தூக்கிவிடுறத்துக்கு யாரும் இல்ல"- கண்கலங்கிய ரிஷி ரித்விக்

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

Diesel: "ஹரிஷ் கல்யாணோட சக்சஸ் என்னோட சக்சஸ் மாதிரி" - நடிகை அதுல்யா ரவி

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

Disel: "சிம்பு அண்ணா ட்ரைலர் பார்த்துட்டு சொன்ன விஷயம்" - ஹரிஷ் கல்யாண்

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'. இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலை... மேலும் பார்க்க

Disel: "இந்தப் படம் தீபாவளி ரிலீஸுக்கு என்ன தகுதி இருக்குனு கேட்ருக்காங்க"- ஹரிஷ் கல்யாண் எமோஷனல்

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

Bison: `பைசன்-ல நான்தான் சீனியர்; ஆனா, 2வது நாளிலே அழுதுட்டேன்’ - ரஜிஷா விஜயன் ஷேரிங்ஸ்

மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரு... மேலும் பார்க்க