செய்திகள் :

'முழு கல்விக் கட்டணம் டு லேப்டாப்' - பெடரல் வங்கி வழங்கும் உதவித்தொகை - யார் யார் விண்ணப்பிக்கலாம்?!

post image
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பெடரல் வங்கி தங்களது நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் நினைவாக 'பெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு உதவித்தொகை 2024-25' வழங்க விண்ணப்பங்களை கோரியுள்ளது.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

  • எம்.பி.பி.எஸ், பி.இ / பி.டெக், பி.எஸ்.சி நர்சிங், எம்.பி.ஏ (முழு நேரப்படிப்பு), பி.எஸ்.சி விவசாயம், பி.எஸ்.சி கூட்டுறவு மற்றும் பேங்கிங் ஆகிய துறைகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மெரிட் அடிப்படையில் சீட் பெற்றிருக்க வேண்டும்.

  • மறைந்த ராணுவ அதிகாரிகளின் பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

  • கல்லூரி கட்டணம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் கல்வி சம்பந்தமான பிற தேவைகளுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

  • வேண்டுமானால், ஒரு கணினி, லேப்டாப் அல்லது டேப்லெட் வாங்க காசு வழங்கப்படும்.

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

சேர்க்கை கடிதம் (Admission letter), கல்லூரி கட்டண விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், குடும்ப வருமான சான்றிதழ்கள் மற்றும் இன்னும் சில ஆவணங்கள்.

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் மற்றும் குடும்ப வருமானம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர், உதவித்தொகை பெறும் மாணவர்களின் பெயர்கள் பெடரல் வங்கி இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்க கடை தேதி: டிசம்பர் 18, 2024.

விண்ணப்பிக்கும் இணையதளம்:www.federalbank.co.in

திண்டுக்கல்: "30 அரசுப் பள்ளிகளில் மைதானம் இல்லை" - ஆர்டிஐ சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரதிஷ் பாண்டியன். சமூக ஆர்வலரான இவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்று மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

Kalvi: உலகின் சிறந்த பள்ளிகளின் பட்டியலில் இடம்பெற்ற கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி

தமிழகத்தில் மதுரையை சேர்ந்த கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, உலகின் சிறந்த பள்ளிகளுக்கான தேர்வு 2024 இல் பொதுமக்கள் வாக்குப்பதிவு மற்றும் சமூக விருப்ப அடிப்படையில் விருதைப் பெற்றுள்ளது.உலகின் சிறந்த ... மேலும் பார்க்க

பந்தலூர்: மூடப்பட்ட 50 ஆண்டுக்கால ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி; வருத்தத்தில் மக்கள்! காரணம் என்ன?

மலை மாவட்டமான நீலகிரியில் பழங்குடிகள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களை கல்வியில் மேம்படுத்தும் வகையில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்ப... மேலும் பார்க்க

Maharashtra: `35 இல்லை இனி 20 மார்க் எடுத்தாலே பாஸ், ஆனால்...' - மகாராஷ்டிரா அரசின் `புது' திட்டம்

பொதுவாக பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அதுதான் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்பட... மேலும் பார்க்க