மூக்குத்தி அம்மன் - 2 நடிகர்கள் அறிவிப்பு!
மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன் தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இதையும் படிக்க: சிங்கமுத்து வழக்கு: சாட்சியம் அளிக்க நடிகா் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜா்
இப்பாகத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சுந்தர் சி இயக்குகிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் பூஜை நேற்று (மார்ச் 5) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், நடிகைகள் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களே இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.