செய்திகள் :

``மூத்த தலைவர், இளைய தலைவர் என்பதெல்லாம் அரசியலில் இல்லை... நான் சாதாரண தொண்டன்!'' -செங்கோட்டையன்

post image

திருச்சி, ஸ்ரீரங்கத்துக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“புது கேள்விகள் எல்லாம் கேட்டால் நான் எப்படி பதில் கூறுவது?, அந்தியூர் சட்டமன்ற தொகுதி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி. அங்கு சில துரோகிகளால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதை ஏற்கெனவே தெளிவுப்படுத்தி விட்டேன்.

பா.ஜ.க உடன் அ.தி.மு.க கூட்டணி வைக்க வேண்டும் என ஒ.பி.எஸ் பேசி இருப்பது குறித்து, ஓ.பி.எஸ்ஸிடம் தான் கேட்க வேண்டும். கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்பதெல்லாம் இல்லை. அமைதியாக அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது.

செங்கோட்டையன்

நீதிமன்ற வழக்கு தொடர்பாக சி.வி.சண்முகம் தான் பதில் கூறுவார். அவர் தான் எல்லா பதிலும் கூறுகிறார். நான் சாதாரண தொண்டன். என்னிடம் கேட்கும் கேள்விகளை பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க - பா.ஜ.க-வோடு கூட்டணி வைக்குமா என்பது குறித்தும் பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். விவசாயிகள் நடத்திய கூட்டத்தை நான் புறக்கணிக்கவில்லை. அதில் கலந்து கொள்ளவில்லை என்று தான் ஏற்கெனவே கூறினேன்” என்றார்.

Udhayanidhi Stalin: ``யார் அரசியல் செய்வது?'' -மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உதயநிதி ஆதங்கம்!

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது இ... மேலும் பார்க்க

``உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த விளையாட்டு எங்களிடம் செல்லாது'' - நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு மத்திய பா.ஜ.க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

UP: ``ஆங்கிலம் அதிகாரத்தை அடையும் ஆயுதம்'' - மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆங்கில மொழியின் மதிப்பையும் எடுத்து... மேலும் பார்க்க

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில், 78 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந... மேலும் பார்க்க

வம்பிழுத்த அண்ணாமலை - உலக டிரெண்டிங்கில் GET OUT MODI | Delhi CM | Udhayanidhi DMK | Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* Delhi CM - மூத்த தலைவர்களை ஓரங்கட்டி விட்டு, ரேகா குப்தா டெல்லி முதல்வரானது எப்படி? * டெல்லி முதல்வர் பதவியேற்பு!* Kumbh Mela: ``அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?" -ரயில்... மேலும் பார்க்க