செய்திகள் :

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

post image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,449 கனாடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 9,154கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 10,449 கனஅடியாக அதிகரித்துள்ளது.

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள்!

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.51அடியிலிருந்து 106.98அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 74.18 டிஎம்சியாக உள்ளது.

அதிமுகவுடன் கூட்டணியா? தவெக விளக்கம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நடிகர் விஜய் கூட்டணி வைக்கவுள்ளதாக கருத்துகள் பரவி வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் ... மேலும் பார்க்க

நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடர்கள் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து குறைவு!

தமிழகம், கா்நாடகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 10,000 கனஅடியாக உள்ளது.கா்நாடகா மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக த... மேலும் பார்க்க

ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை

ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 39-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி மாணவா... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.16-ஆவது நிதிக்குழுவுடனான ஆலோசனை கூட்டத்தில் திங்கள்கிழமை அவர் பேசியதாவது, 16-ஆவது நிதிக் குழு பரி... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது.கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயா்ந்து, ரூ.5... மேலும் பார்க்க