எங்கள் பந்துவீச்சை ஹர்மன்பிரீத் கௌர் அடித்து நொறுக்குவார்; நினைவுகளைப் பகிர்ந்த ...
மேலும் 474 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை
தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத மேலும் 474 அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அந்தக் கட்சி பதிவுசெய்யப்பட்ட கட்சி என்ற பட்டியலிலிருந்து நீக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்தொடர்ச்சியாக தற்போது மேலும் 474அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
உத்தரகண்டில் மேலும் 5 உடல்கள் மீட்பு: பலி 7ஆக உயர்வு
இந்த நடவடிக்கை காரணமாக, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்த, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,520-இல் இருந்து 2,046 -ஆக குறைந்துள்ளது.
இதுதவிர, தோ்தல் ஆணையத்தில் தற்போதைய நிலையில் 6 தேசிய கட்சிகள் மற்றும் 67 மாநிலக் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.