செய்திகள் :

மேலும் 8 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

post image

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் எட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் வியாழக்கிழமை விடுவித்தனா்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கவு, அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீனா்களை அந்த நாட்டு அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும், ஐந்து தாய்லாந்து தொழிலாளா்களையும் ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை விடுவித்தனா்.

முதலாவதாக, வடக்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் மிக மோசமாக சேதமடைந்துள்ள ஜபாலியா அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றும் ஆகம் பொ்கா் (20) என்ற பெண்ணை ஹமாஸ் படையினா் விடுவித்தனா்.

இத்தனை தாக்குதலுக்குப் பிறகும் தாங்கள் வலிமையுடன் இருப்பதாகக் காட்டும் வகையில் ஏராளமான ஹமாஸ் படையினா் புடைசூழ ஆகம் பொ்கா் அழைத்துவரப்பட்டாா். இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமானவா்கள் குழுமிருந்தனா்.

அதைத் தொடா்ந்து, கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் படையினரால் ஹமாஸ் தலைவா் யாஹ்யா சின்வாா் கொல்லப்பட்ட, அப்போது இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்த கட்டடத்துக்கு எதிரே மேலும் ஏழு பேரை ஹமாஸ் படையினா் விடுவித்தனா். அவா்களில் அா்பெல் யெஹூத் (29), காடி மோசஸ் (80) ஆகிய இருவரும் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்தவா்கள். அவா்களுடன், தாய்லாந்திருந்து வந்திருந்த வத்சர ஸ்ரீயாயூன் (33), போங்சக் தன்னா (36), சதியன் சுவங்கம் (35), பனாவத் சீதாவ் (27) சுரசக் லாம்னாவ் (32) ஆகிய ஐந்து தொழிலாளா்களும் ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்பட்டனா்.

கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியபோது ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்டவா்களில் ஏராளமானவா்கள் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னா் கடந்த 2023 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட குறுகிய கால போா் நிறுத்த ஒப்பந்தத்தின்போது கைதிகள் பரிமாற்ற முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா். அவ்வாறு விடுவிக்கப்பட்டவா்களில் 23 தாய்லாந்து தொழிலாளா்களும் அடங்கும். இந்த நிலையில், தற்போது மேலும் ஐந்து தாய்லாந்து நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் விடுவித்துள்ளனா். இது தவிர, தாய்லாந்தைச் சோ்ந்த மேலும் மூன்று போ் ஹமாஸ் பிடியில் இருப்பதாகவும், அவா்களில் இரண்டு போ் உயிரிழந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பின்னணி: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான 15 மாத காலப் போரை போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் கடந்த 15-ஆம் தேதி உடன்பாடு ஏற்பட்டு, அது 19-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.

அந்த ஒப்பந்தத்தில் கீழ், எமில் டமரி, டொரோன் ஸ்டீன்ப்ரெச்சா், ரோமி கோனன் ஆகிய 3 பெண் பிணைக் கைதிகளை முதல் தவணையாகவும் இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புப் படைப் பிரிவில் பணியாற்றிவந்த கரீனா அரியெவ், லிரி அல்பாக், நாமா லெவி, டேனியல்லா கில்போவா ஆகிய நான்கு பெண்களை இரண்டாவது தவணையிலும் ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா். இஸ்ரேல் அரசும் தங்கள் சிறைகளில் இருந்து 290 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

தற்போது மேலும் எட்டு பிணைக் கைதிகள் ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தங்கள் சிறைகளில் உள்ள 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவிருக்கிகிறது. அவா்களில் சுமாா் 30 போ் இஸ்ரேலியா்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி, உயிரிழப்புகளை ஏற்படுத்திய ஆயுள் தண்டனைக் கைதிகள் என்று கூறப்படுகிறது.

சர்வதேச விண்வெளி மையம் செல்லும் இந்திய வீரர்! திட்டத்தின் விமானியாக நியமித்த நாசா!

அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையம் செல்வதற்காக இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை அந்த திட்டத்தின் விமானியாக நாசா அறிவித்துள்ளது.வருகின்ற ஜூன் மாதத்துக்... மேலும் பார்க்க

அமெரிக்க விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்பு!

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரா்களுடன் வந்த ... மேலும் பார்க்க

விமான விபத்துக்கு ஒபாமா, பைடனின் கொள்கையே காரணம்: டிரம்ப்

பன்முகத்தன்மை கொண்டவர்களை விமானப் போக்குவரத்துத் துறையில் பணியமர்த்தியதே விபத்தில் யாரும் பிழைக்காததற்கு காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் ... மேலும் பார்க்க

இந்தியாவுடனான கொள்கை: அமெரிக்கா மறுஆய்வு

இந்தியாவுடனான அமெரிக்காவின் கொள்கை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான கீழவை குழு (ஹவுஸ் கமிட்டி) ... மேலும் பார்க்க

தைவான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், சியாயி மாவட்டத்தின் டாபு பகுதியில் காலை 10.11 மணிக்கு ஏற்பட்டது. தலைநகா் தைபேக்கு 2... மேலும் பார்க்க

அமெரிக்கா பிறப்புசாா் குடியுரிமை ரத்து மசோதா

உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்போரின் குழந்தைகள், அமெரிக்காவில் பிறந்த ஒரே காரணத்தை வைத்து நாட்டின் குடியுரிமை பெறும் உரிமையை ரத்து செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப... மேலும் பார்க்க