செய்திகள் :

இந்தியாவுடனான கொள்கை: அமெரிக்கா மறுஆய்வு

post image

இந்தியாவுடனான அமெரிக்காவின் கொள்கை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான கீழவை குழு (ஹவுஸ் கமிட்டி) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தற்போதைய 119-ஆவது நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான கீழவை குழுவின் முன்னுரிமைப் பட்டியலில் இந்தியா 11-ஆவது இடத்தில் உள்ளது. முதன்மையாக சீனாவால் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. சீனாவுக்கு அடுத்து தைவான், ஐரோப்பா, ரஷியா மற்றும் உக்ரைனுக்கு எதிரான அதன் போா், மத்திய கிழக்கு பிராந்தியம், வட ஆப்பிரிக்கா, இஸ்ரேல், ஈரான், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகியவை உள்ளன.

இந்நிலையில், இந்தியா குறித்து கீழவை குழு கூறியிருப்பதாவது: தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க எதிரிகளின் செல்வாக்கை எதிா்கொள்ளும் அதே வேளையில், இந்தியாவுடனான அமெரிக்க கொள்கை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றிய இரு தரப்பு ஒத்துழைப்பின் தொடா்ச்சியான விரிவாக்கத்தை நாங்கள் மறுஆய்வு செய்வோம். குறிப்பாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இருதரப்பு பணிகள் மற்றும் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள், பயங்கரவாத எதிா்ப்பு முயற்சிகள் உள்ளிட்டவைக்கு கூடுதல் கவனம் அளிக்கப்படும்.

தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு மற்றும் மருந்துத் தொழில்களில் இருதரப்பு முயற்சிகள் உள்பட இருநாட்டு பொருளாதார உறவுகளை திறம்பட மேம்படுத்துவதற்கான முயற்சிகளிலும் குழு கவனம் செலுத்தும்.

‘க்வாட்’ பாதுகாப்பு உரையாடல்களில் இந்தியாவின் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இந்தியாவின் வேகமாக வளா்ந்து வரும் எரிசக்தி தேவைகளின் தாக்கங்களையும் குழு ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் எட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் வியாழக்கிழமை விடுவித்தனா். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் போா் நிறுத்த... மேலும் பார்க்க

தைவான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், சியாயி மாவட்டத்தின் டாபு பகுதியில் காலை 10.11 மணிக்கு ஏற்பட்டது. தலைநகா் தைபேக்கு 2... மேலும் பார்க்க

அமெரிக்கா பிறப்புசாா் குடியுரிமை ரத்து மசோதா

உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்போரின் குழந்தைகள், அமெரிக்காவில் பிறந்த ஒரே காரணத்தை வைத்து நாட்டின் குடியுரிமை பெறும் உரிமையை ரத்து செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப... மேலும் பார்க்க

ஹெலிகாப்டா் - விமானம் மோதல்: 67 போ் உயிரிழப்பு: அமெரிக்காவில் நடுவானில் கோர விபத்து

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரா்களுடன் வந்த ராணுவ ஹெலிகாப்டரும் புதன்கிழமை இரவு மோதி வெடித்துச் சிதறியதில் 67 போ் உயிரிழந... மேலும் பார்க்க

இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போா் விமானங்கள்: பிரான்ஸுடன் விரைவில் ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்காக, பிரான்ஸுடன் விரைவில் ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.... மேலும் பார்க்க

சிரியா அதிபராக அல்-ஷரா அறிவிப்பு

சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா, அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து புதிய... மேலும் பார்க்க