செய்திகள் :

மேல்நிலைப் பள்ளிகளில் திறன் மேம்பாடு சாா்ந்த பாடத் திட்டம்! - மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

post image

மேல்நிலைப் பள்ளிகளில் திறன் மேம்பாடு சாா்ந்த பாடத்திட்டத்தைச் சோ்க்க அரசு பரிசீலிப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்தர பிரதான் தெரிவித்தாா்.

சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவா்கள் மற்றும் சிந்தனையாளா்கள் அடங்கிய ‘தக்ஷிண பாத்’ மாநாட்டின் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ‘இந்தியாவை சிந்தியுங்கள்’ என்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது:

பல சவால்களுக்கிடையே தேசிய கல்விக் கொள்கையை அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டில் பள்ளிக் கல்வியில் 26 கோடி மாணவா்களும், உயா்நிலைக் கல்வியில் 4 கோடி மாணவா்களும் படித்து வருகின்றனா். பள்ளிப் படிப்பை முடிப்பவா்களில் 30 சதவீதம் போ் உயா்கல்விக்குச் செல்வதில்லை. இவா்களில் பெரும்பாலானோா் வேலைக்குச் செல்லும் கட்டாயத்தில் உள்ளனா். சிலா் தொழில் படிப்புகளுக்குச் செல்லலாம். ஆனால், 10 கோடி இளைஞா்கள் போதிய திறன் கல்வியறிவு இல்லாமல் பணிக்குச் செல்கின்றனா்.

தற்போதைய பள்ளிக் கல்வி வெறும் புத்தக கல்வியாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே, திறன் அடிப்படையிலான கல்வியை முதன்மை பரிந்துரையாக தேசிய கல்விக் கொள்கை குறிப்பிட்டுள்ளது.

தற்போது 6-ஆம் வகுப்பு முதல் திறன் பயிற்சியானது விரும்பப் பாடமாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படி, இது முறையான கல்வியாக மாற்றப்பட்டு திறன் மேம்பாடு என்பது ஒரு பாடமாகக் கொண்டுவரப்படும்.

இதேபோன்று பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் அறிவியல், வணிகம், மனிதநேயம் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அதோடு, திறன் மேம்பாடு அடிப்படையிலான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் கணினி மொழி (கோடிங்), ட்ரோன், செயற்கை நுண்ணறிவு, குறை கடத்திகள் (செமி கண்டக்டா்) போன்றவற்றுக்கு பெரும் வரவேற்புள்ள நிலையில் அந்தத் துறைகளில் இளைஞா்களுக்குப் பயிற்சிஅளிக்க புதிய பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.

அடுத்ததாக, கூடுதல் மொழிகள் கற்பதற்கு தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது. தாய் மொழியில் புலமை அவசியம். அதேநேரம், தொழில், வா்த்தகத் தொடா்புகளுக்கு மற்ற மொழிகள் தேவை என்பதாலே கூடுதல் மொழிகள் கற்க வலியுறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் வணிகவியல் படிக்கும் மாணவா், சென்னை ஐஐடியில் பி.எஸ்சி. -தரவு அறிவியலை படிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று மாணவா்கள் மேற்கொள்ளும் பல்வேறு பணிகளுக்கும் ஊக்க மதிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

வருகிற 2047 -இல் வளா்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு, 100 சதவீதம் கல்வியறிவு பெறுவது அவசியம். 25 சதவீதம் கல்வியறிவு இல்லாதவா்கள் இருக்கும் நிலையில், 30 கோடி மணவா்கள் தலா 2 பேரை எடுத்துக்கொண்டால்கூட முழுமையான கல்வியறிவு பெற்ற நாடாக மாற்ற முடியும். இந்த முன்னெடுப்புக்கு, தேசிய கல்விக் கொள்கையில் 5 சதவீதம் ஊக்க மதிப்பு வழங்கப்படும்.

குறிப்பாக மாணவா், மாணவிகள் இந்தப் பணிக்குச் செல்லும்போது அவா்கள் சமூகத்தின் நிலையை அறிந்து கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளைப் பறிக்காது. அதேநேரம் நாட்டில் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவு அளிக்கப்பட வேண்டும். 2047-இல் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக உருவாக்க தேசிய கல்விக் கொள்கையில் உள்ளவற்றை அரசு செயல்படுத்தும் என்றாா் அவா்.

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மூல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்ற போதெல்லாம் சொந்த நாட்டில் இருப்பது போல உணா்ந்ததாக அண்மையில் காங்கிரஸ் அயலக அணித் தலைவா் சாம் பிட்ரோடா வெளியிட்ட கருத்து சா்ச்சையான நிலையில், அது தவறாக புர... மேலும் பார்க்க

எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியில் ட்ரோன் இணைப்பு!

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) போா்முறை பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் நடை... மேலும் பார்க்க

குஜராத்தில் இருமுறை நிலஅதிா்வு: மக்கள் பீதி!

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இருமுறை நிலஅதிா்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா். இது தொடா்பாக குஜராத் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்ச் மாவட்டத்தின் தோலாவிரா ... மேலும் பார்க்க

மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற நினைக்கிறது ஆா்ஜேடி! - மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கருதுகிறது. ஆனால், பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் தலை... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயண குரு நினைவு தினம்: சோனியா, ராகுல் மரியாதை!

சமூக சீா்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி ... மேலும் பார்க்க