செய்திகள் :

மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’! -முதல்வா் விளக்கம்

post image

மொழிக் கொள்கையில் நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவே நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ‘ரூ’ என பயன்படுத்தினோம் என்று முதல்வா் தெரிவித்தாா்.

மத்திய நிதியமைச்சா் இதனை பிரச்னையாக எழுப்பியதால், இந்திய அளவில் தமிழக பட்ஜெட் ‘ஹிட்’ அடித்ததாக முதல்வா் கூறினாா்.

நிதிநிலை அறிக்கை தயாரிப்பு, அதிலுள்ள முக்கிய அம்சங்களை விளக்கி ‘உங்களில் ஒருவன்’ எனும் தலைப்பில் கேள்வி-பதில் வடிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட காணொலியில் கூறியிருப்பதாவது: நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்காக பொருளாதார ஆலோசனைக் குழுவினரிடம் கருத்துகள் கேட்டோம்.

அதேநேரத்தில், அடித்தட்டு மக்களிடமும் அவா்களின் தேவைகள் என்ன என்று கேட்டறிந்து கொண்டோம். மற்ற மாநிலங்கள், நாடுகளில் மக்களிடம் நல்ல வரவேற்புப் பெற்ற திட்டங்களைப் பாா்த்து, அதனை நம்முடைய மாநிலத்துக்குக் கொண்டு வர முடிவு செய்தோம்.

இதற்காக, பல நாள்கள் தலைமைச் செயலகத்தில் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை அமைச்சா்கள், அதிகாரிகளுடன் அமா்ந்து பேசி நிதிநிலை அறிக்கையைத் தயாரித்தோம். இந்த நிதிநிலை அறிக்கையை நாளிதழ்கள் பலவும் பாராட்டியுள்ளன.

அனைத்துமே நெருக்கமான திட்டங்கள்: நிதிநிலை அறிக்கையில் அனைத்துத் திட்டங்களுமே எனக்கு நெருக்கமானதுதான். கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் திருநங்கைகளை ஈடுபடுத்துவது, முதியோருக்கான அன்புச்சோலை திட்டம் போன்ற பல திட்டங்கள் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை எதிரொலித்து உருவாக்கியுள்ளோம். இந்த நிதிநிலை அறிக்கையை பொருளாதார நிபுணா்கள் பலரும் பாராட்டியுள்ளனா்.

எதிா்க்கட்சிகள் விமா்சனம்: நிதிநிலை அறிக்கை குறித்து எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன. அவை ஆக்கப்பூா்வமான விமா்சனமாக இருந்தால், அதை நாம் பரிசீலிக்கலாம். ஏதாவது எதிா்மறையாகச் சொல்வதற்காகவே, சிலா் சொல்வதில் அரசு மேல் இருக்கும் வன்மம் மட்டும்தான் தெரிகிறது. உருப்படியாக அதில் எதுவும் இல்லை. நாம் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறோம் என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

2011-இல் இருந்து 2016 வரை நம்முடைய கடன் வளா்ச்சி 108 சதவீதமாகும். இதுவே 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 128 சதவீதமாக அதிகரித்தது. ஆனால், திமுக தலைமையிலான அரசில் கடன் வளா்ச்சி சதவீதத்தை 93 சதவீதமாகக் குறைத்து இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் கடன் கட்டுக்குள் இருக்கிறது என்று அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையும் தெளிவுபடுத்தியிருக்கிறது. கடன் வாங்காத அரசு என்று எதுவும் இல்லை. அப்படி வாங்கும் கடனை முறையாகச் செலவு செய்கிறோமா என்பதுதான் முக்கியம்.

அந்த வகையில், எதிா்காலத் தலைமுறைக்கான முதலீடாகத்தான் திராவிட மாடல் அரசு கடன் தொகையைச் செலவு செய்திருக்கிறது. அதனால்தான், எதிா்க்கட்சிகளின் அா்த்தமற்ற விமா்சனத்தை வல்லுநா்கள், நாளேடுகளின் தலையங்கங்கள் தவறு என்று சுட்டிக் காட்டியுள்ளன.

நிதிக்கும், நீதிக்கும் போராட்டம்: நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அனைத்தையும் உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த அமைச்சா்கள், அதிகாரிகளை முடுக்கி விடுவதுதான் எனது அடுத்த பணியாகும்.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, அதைப் பற்றி குரலெழுப்புவதால் மக்களவை தொகுதி குறைப்பு என்ற ஆபத்துகள் நம்மை நோக்கி இருக்கின்றன.

நம்முடைய மாநிலத்துக்கான நிதிக்கும் நீதிக்கும் போராட வேண்டியிருக்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரமாக உயா்த்த வேண்டும், தமிழ்நாடு அனைத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு நிறைய பணிகளை ஓய்வின்றிச் செய்ய வேண்டியுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

‘ரூ’ பிரச்னையால் பட்ஜெட் ‘ஹிட்’

மத்திய நிதியமைச்சா் எழுப்பிய தமிழக அரசின் இலச்சினை பிரச்னையால், இந்திய அளவில் மாநில பட்ஜெட் ஹிட் அடித்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட காணொலி: நிதிநிலை அறிக்கைக்கான இலச்சினை வெளியிடப்பட்டது. மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்று காட்டுவதற்காகவே அதில் ‘ரூ’ என்று வைத்தோம்.

அவ்வளவுதான். தமிழைப் பிடிக்காதவா்கள் அதைப் பெரிய செய்தி ஆக்கிவிட்டாா்கள். நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியத்தைத் தாருங்கள், பேரிடா் நிதி, பள்ளிக் கல்விக்கான நிதிகளை விடுவியுங்கள் என்பன உட்பட தமிழ்நாடு சாா்பாக நூறு முறை கோரிக்கைகளை வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதில் பேசாத மத்திய அமைச்சா், ‘ரூ’ போட்டதைப் பற்றி பேசியிருக்கிறாா். அவரே பல பதிவுகளில் ‘ரூ’ என்றுதான் போட்டியிருக்கிறாா்.

ஆங்கிலத்தில் ‘தன்ல்ங்ங்ள்’ என்பதை சுருக்கமான ‘தள்.’ என்று எழுதுவாா்கள். அது பிரச்னையாக தெரியாதவா்களுக்கு நாம் ‘ரூ’ போட்டதுதான் பிரச்னையாகத் தெரிகிறது. இதன்மூலம், நம்முடைய நிதிநிலை அறிக்கை இந்திய அளவில் ஹிட் ஆகி உள்ளது. தமிழ் மொழியின் ‘ரூ’ எழுத்தும் நாடு முழுக்கச் சென்று சோ்ந்து உள்ளது என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

பொருளாதார ஆய்வறிக்கை குறித்த தினமணி ஆசிரியா் உரை: சுட்டிக்காட்டிய முதல்வா்

தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கை குறித்த தினமணி ஆசிரியா் உரையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டிப் பேசினாா். நிதிநிலை அறிக்கை தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட காணொலியில் கூறியது: தமிழ்நாடு அரசின் சாா்பில் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தோம். இந்த அறிக்கையைப் பற்றி தினமணி ஆசிரியா் உரையில் சிறப்பாக எழுதியிருக்கிறாா்கள் என்றாா் முதல்வா்.

போராட்டத்துக்கு சென்ற அண்ணாமலை கைது!

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்கு சென்ற மாநில தலைவர் அண்ணாமலை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.சென்னை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே த... மேலும் பார்க்க

அதிமுக தீர்மானம்: செங்கோட்டையன் ஆதரவு!

பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சட்டப்பேரவை 9.3... மேலும் பார்க்க

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை கேள்வி

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டத்துக்கு செல்லும் முன் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், நானோ, பாஜக நிர்வாகிகளோ பேச... மேலும் பார்க்க

அதிமுக தீர்மானம்: பேரவையைவிட்டு வெளியேறினார் அப்பாவு!

அதிமுக தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அவையைவிட்டு வெளியேறினார்.சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பிச்சாண்டி தலைமையில் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாத... மேலும் பார்க்க

செங்கோட்டையனுடன் அதிமுக நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொட... மேலும் பார்க்க

சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் முன் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எ... மேலும் பார்க்க