மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி - 2!
இயக்குநர் மோகன் ஜி திரௌபதி இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. திரைப்படங்களைத் தாண்டி அரசியல் கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இதையும் படிக்க: டீசர் புரோமாவால் அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
இந்த நிலையில், மோகன் ஜி தன் அடுத்த படமாக திரௌபதி - 2 படத்தை இயக்கவுள்ள அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் இப்படத்தின் கதை 14 ஆம் நூற்றாண்டில் நடப்பதுபோல் உருவாகப்பட உள்ளதை, “14 ஆம் நூற்றாண்டில் மறைக்கப்பட்ட போசளர்களின் செந்நீர் சரிதம்” எனக் குறிப்பிட்டு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். பான் இந்திய மொழிகளில் இப்படம் உருவாகிறது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, தர்மம் காக்க உயிரை துச்சமென துறந்த மாவீரர்களின் மறைக்கப்பட்ட வீர தீர ரத்த சரித்திரம்.. இந்த ஆண்டு இறுதியில், @richardrishi அவர்களின் நடிப்பில், @GhibranVaibodha அவர்களின் இசையில் திரையில் மீண்டும் மிரட்ட வருகிறாள் #திரெளபதி2 ❤️@DoneChannel1… pic.twitter.com/UVNCQvnuoC
— Mohan G Kshatriyan (@mohandreamer) February 26, 2025