திருநெல்வேலி: `ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள்' நவீன விண்வெளி தொழில்நுட்ப காட்சி அ...
மோரமடுகில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரியை அடுத்த மோரமடுகு கிராமத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ கே.அசோக்குமாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி ஒன்றியம், மோரமடுகு கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-ஆம் ஆண்டு நிதியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் செல்லப்பன் வீடு முதல் மோரமடுகு பேருந்து நிறுத்தம் வரையும், ரூ. 3 லட்சம் மதிப்பில் அப்பாவு வீடு முதல் தனுஷ்கோடி வீடு வரையிலும் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் பிரதாப், துணைத் தலைவா் மகேந்திரன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.