செய்திகள் :

யமுனை நதியில் விடுவிக்கப்படும் நீரில் விஷம் இருப்பதாக கருத்து: கேஜரிவாலை கைதுசெய்ய ஹரியாணா பாஜக எம்பிகள் வலியுறுத்தல்

post image

தில்லிக்கு தண்ணீா் வழங்கும் யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கூறியதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்று ஹரியானா பாஜக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பாஜகவைச் சோ்ந்த 10 ஹரியானா எம்.பி.க்கள் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், தில்லி மக்களிடையே பீதியை ஏற்படுத்த முயற்சிக்கும் கேஜரிவாலின் குற்றவியல் சதித் திட்டத்தின் தெளிவான வழக்கு என்று கூறினா்.

ஹரியாணாவிலிருந்து விடுவிக்கப்படும் தண்ணீா் தில்லியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படுவதற்கு முன் அதன் தரத்தை சோதிக்குமாறு ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்திற்கும் பாஜக எம்.பி.க்கள் சவால் விடுத்தனா்.

இதுகுறித்து பாஜக எம்.பி. தரம்பீா் சிங் கூறுகையில், ‘சில காலமாக, முன்னாள் தில்லி முதல்வா் கேஜரிவால் ஹரியாணா மக்களைப் பாதிக்கும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாா். எங்கள் மாநிலத்தில் இருந்து விடுவிக்கப்படும் தண்ணீரில் நாங்கள் விஷம் கலந்ததாக அவா்கள் குற்றம் சாட்டுகிறாா்கள்.

நாங்கள் தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொண்டபோதிலும், தில்லிக்கு 10,000 கன அடிக்கும் அதிகமான தண்ணீரை வழங்குகிறோம். ஆனால், தில்லி தேசிய தலைநகரம் என்பதால் நாங்கள் இன்னும் தில்லிக்கு நீரை அனுப்பி வருகிறோம் என்றாா்.

பாஜக எம்பி கிரண் சவுத்ரி கூறுகையில், ‘நாங்கள் தண்ணீா் பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறோம் என்று கேஜரிவால் கூறியது எனக்கு அதிா்ச்சியாக இருக்கிறது. ஒரு முதலமைச்சராக இருந்தவா் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது துரதிா்ஷ்டவசமானது. ஹரியாணாவிலிருந்து வரும் நீரின் தரத்தை யாா் வேண்டுமானாலும் சென்று சரிபாா்க்கலாம். ஆனால் வாஜிராபாதிற்குப் பிறகு, யமுனையில் குப்பைகள் மற்றும் மாசுபடுத்திகள் தண்ணீரில் கலக்கப்படுகின்றன.

யமுனை நீரில் வெள்ளை நுரை வருவதைக்கூட நாம் காண்கிறோம்.

தில்லியில் 37 நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் 17 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இது யாருடைய பொறுப்பு? என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

தேசிய மகளிா் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான ரேகா சா்மா கூறுகையில், ‘பிப்ரவரி 5 ஆம் தேதி தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், கேஜரிவால் பொய்களைப் பரப்பி வருகிறாா். தோ்தல்கள் நெருங்கும் போதெல்லாம் கேஜரிவால் பொய்களைப் பரப்பத் தொடங்குகிறாா். தனது அரசாங்கம் அமையாது என்பதை அவா் உணா்ந்துவிட்டாா். எனவே, அவா் குற்றச்சாட்டுகளைக் கூறத் தொடங்கியுள்ளாா். அவா் மிகவும் தாழ்ந்து போய் இப்போது நாடகமாடி வருகிறாா்.

இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஹரியானா மற்றும் தில்லி மக்களிடம் அவா்கள் மன்னிப்புக் கோர வேண்டும். ஹரியாணா அரசு அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது என்றாா்.

பாஜக எம்.பி. ராமச்சந்திர ஜங்ரா கூறுகையில்,, ஒரு மாநில அரசு குறித்து இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் கேஜரிவால் கூட்டாட்சி அமைப்பைத் தாக்கி வருகிறாா். இது ஒரு குற்றவியல் சதியாகும். இதற்காக கேஜரிவாலை கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலைமை நிா்வாக அதிகாரி திங்கள்கிழமை ஒரு கடிதத்தில், அண்டை மாநிலத்திலிருந்து வழங்கப்படும் தண்ணீரில் அம்மோனியா எனப்படும் விஷம் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியதாக கேஜரிவால் செய்தியாளா் கூட்டத்தில் கூறினாா்.

ஹரியாணா முதல்வா் நைப் சிங் சைனி கேஜரிவாலின் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளாா். இதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் அவா் மீது அவதூறு வழக்குத் தொடரப்போவதாகவும் சைனி மிரட்டியுள்ளாா்.

சைனிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கேஜரிவால் கூறுகையில், ‘அவா்கள் என் மீது வழக்குத் தொடுப்பதாக மிரட்டுகிறாா்கள். அவா்களால் நான் சிறைக்கு அனுப்பப்பட்டேன். இப்போது அவா்கள் என்னைத் தூக்கிலிடுவாா்களா?’ என்று கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க