செய்திகள் :

யாருக்கு வருமான வரிச் சலுகை? பிரதமர் மோடி சூசகமாக சொன்னது!

post image

நாட்டில், நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்படும் என்பதை, பிரதமர் மோடி சூசகமாகக் கூறியிருந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்றக் கூட்டத்தை சீர்குலைக்க வெளிநாட்டு தூண்டுதலின்றி துவங்கும் கூட்டம் என்று குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும், பிரதமர் மோடி பேசுகையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு லட்சுமி தேவி தனது ஆசியை வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதாகக் கூறியது சுவாரஸ்யமாக இருந்தது. இது அவர் சூசகமாகக் கூறியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அதாவது, "ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு லட்சுமி தேவி அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஜனநாயக நாடாக இந்தியா 75 ஆண்டுகளை நிறைவு செய்தது பெருமைக்குரியதாக உள்ளது. உலக அரங்கில், இந்தியா தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. எனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும்.

2047-ல், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​விக்சித் பாரத் திட்டத்தை இந்தியா நிறைவேற்றும் என்றும், இந்த பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் என நான் நம்பிக்கையுடன் கூறுவேன் என்றும் பிரதமர் மோடி பேசியிருந்தார்.

அதாவது, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையிலும், மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையிலும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசியிருப்பதும், லட்சுமி தேவி அருள் புரிய வேண்டும் என்று கூறியிருப்பதும், 2025 நிதிநிலை அறிக்கை, நடுத்தர மக்கள் மிகவும் எதிர்பார்க்கும், வருமான வரிச் சலுகையை வழங்குமா? என்று ஆவலை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இதற்கான விடை நாளை தெரியும்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை காலை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.

நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினார்.

அதைத் தொடா்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை மதியம் 1.15 மணியளவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளாா்.

வழக்கமாகவே, நிதிநிலை அறிக்கையை, வருவாய் ஈட்டுவோர், வரிச் சலுகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன்தான் அணுகுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு வரிச் சலுகை அதுவும் நடுத்தர வர்க்கத்துக்குக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, பிரதமர் மோடியின் பேச்சு மூலம் அதிகரித்துள்ளது.

நாளைமுதல் யுபிஐ செயல்படாது? யாருக்கெல்லாம்?

சிறப்பு எழுத்துருக்கள் இருக்கும் யுபிஐ ஐடிகளின் பணப்பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படுவதாகக் கூறிய இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் அறிவிப்பு நாளைமுதல் அமலுக்கு வருகிறது.இணையவழியான பணப்பரிவர்த்தனையில் மு... மேலும் பார்க்க

மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் பேச விரும்புவதில்லை: பிரியங்கா

மக்களின் உண்மையான பிரச்னைகளைப் பற்றி ஒருபோதும் மத்திய அரசு பேச விரும்புவதில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கியது. அதை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் குறித்த சோனியா காந்தியின் கருத்தால் பாஜக கொந்தளிப்பு!

பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் சோர்வாக இருந்ததாக சோனியா காந்தி கூறியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் த... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களில் 5 மத்தியப் பிரதேச பக்தர்கள்!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 30 பேரில் ஐந்து பேர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம... மேலும் பார்க்க

நீதி விசாரணைக் குழு பிராயாக்ராஜில் ஆய்வு!

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட நீதி விசாரணைக்குழு ஆணையம் பிரயாக்ராஜ் சென்றடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜன.29 அன்று ... மேலும் பார்க்க

யமுனை விவகாரம்: கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்!

யமுனை நதி விவகாரத்தில் கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஹரியாணா அரசு, யமுனை நதியில் விஷத்தை கலப்பதாக தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை மு... மேலும் பார்க்க