செய்திகள் :

"ரஜினி முருகன் படத்தை ரஜினி சார் 3 வருஷம் கழிச்சுதான் பாராட்டினார்; ஏன்னா..." - பொன்ராம் பேட்டி

post image

சிவகார்த்திகேயன் - சூரியின் ஜாலி கலாட்டா, ராஜ்கிரண் - சமுத்திரக்கனியின் டார்க் காமெடி என 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஸ்டைலிலேயே வெளியாகி, வரவேற்பைப் பெற்ற படம் 'ரஜினிமுருகன்'. ஒன்பது ஆண்டுகளுக்குப்பிறகு வரும் மார்ச் 14-ம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் பொன்ராமிடம் பேசினேன்.

"ரஜினி முருகன்' ரீ-ரிலீஸ் ரொம்ப சந்தோஷமான விஷயம். இத்தனைநாட்கள் சேனல்களிலும் ஓடிடியிலும் பார்த்துக்கிட்டிருந்த மக்கள் திரும்பவும் தியேட்டர்ல வந்து ரசிக்கப்போறாங்க. எல்லோரும் ஒண்ணா சிரிச்சுப் பார்க்கும்போது, தியேட்டரே கலகலப்பா அதிரப்போகுது. எக்ஸ்பீரியன்ஸும் வேறமாதிரி இருக்கும். ராஜேஷ் சார்கிட்டே உதவி இயக்குநரா இருக்கும்போதுதான், 'ரஜினி முருகன்' கதையை எழுதினேன். சந்தர்ப்ப சூழலால 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பண்ணவேண்டியதாகிடுச்சு. அதோட, வெற்றி கொடுத்த எனர்ஜியால இந்தப் படத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம்.

இயக்குநர் பொன்ராம்

'ரஜினி முருகன்' தாத்தாவை மையப்படுத்தின கதை. தாத்தாதான் ஹீரோ. அவரோட கதைக்குள்ள பேரன் ரஜினி முருகனும் சொந்த பந்தங்களும் வருவாங்க. மற்றபடி, 'ரஜினி முருகன்'ன்னு பேர் வெச்சது, ஒரு அட்ராக்‌ஷனுக்காகத்தான். நான் ரஜினி சாரோட பெரிய ஃபேன். யாரையும் ஃபாலோ பண்ணாம தனக்குன்னு ஒரு ஸ்டைலை கிரியேட் பண்ணி வெச்சிருக்கார். நடிகர்களுக்கு மட்டுமில்ல எங்களை மாதிரி எந்தப் பின்னணியும் இல்லாத இயக்குநர்களுக்கும் அவர்தான் பெரிய இன்ஸ்பிரேஷன். நான் முதன்முதலில் தியேட்டர்ல பார்த்த படமே, ரஜினி சாரோட 'படிக்காதவன்' தான்.

என்னோட ஃபேவரைட் படமும் அதுதான். க்ளைமாக்ஸ் காட்சியெல்லாம் ரொம்பவே உணர்வுப்பூர்வமா இருக்கும். எல்லா இயக்குநருக்குமே ரஜினி சாரை இயக்கணும்ங்கிறது கனவு. எனக்கும் அந்தக் கனவு இருந்துச்சு. ஆனா, வாய்ப்பும் சூழலும் அமையல. அதனாலதான், நாம இயக்குற படத்துக்காவது ரஜினி சார் பேரை வைக்கலாம்னு வச்சோம்" என்பவரிடம் "ரஜினி முருகன் படத்துக்கு ரஜினியிடமிருந்து கிடைத்த பாராட்டு?" என்றோம்.

"ரஜினி சார் அப்போ படத்தைப் பார்க்கல. அவரை சந்திக்க முயற்சியும் செஞ்சோம். ஷூட்டிங்ல செம்ம பிஸி. படம் ரிலீஸாகி 3 வருஷம் கழிச்சுதான், ரஜினி சாரை மீட் பண்ணினேன். அவரோட மாடுலேஷன்லயே 'ரஜினி முருகன் நல்லாருந்துச்சு. உங்களுக்கு காமெடி செம்மையா வருதுல்ல' அப்படின்னு பாராட்டினார். லேட்டா பாராட்டினாலும் வாழ்க்கைல மறக்கமுடியாத பாராட்டு அது" என்று நெகிழ்பவரிடம் "பாடல்களில் கீர்த்தி சுரேஷ் பண்ணும் மேனரிசம் விஜய்யை காப்பியடிக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டதே?" என்றோம்.

ரஜினி முருகன்

"கீர்த்தி எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோயின். ஷூட்டிங்ல அவங்கக்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயமே அந்த மேனரிசம்தான். எல்லோரும் விஜய் சாரைப் ஃபாலோ பண்ணாங்கன்னு சொல்றாங்க. அது தவறான புரிதல். கீர்த்தியோட ரியல் மேனரிசமே அதுதான். ஷூட்டிங்ல முகத்துல கையை வெச்சு நாங்க என்னப் பண்ணிட்டிருக்கோம்னு வாட்ச் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. நாங்க திரும்பிப் பார்த்தா, கையை கண்ணுலருந்து மூவ் பண்ணி அழகா சிரிப்பாங்க. அது பார்க்கவே ரொம்ப க்யூட்டா இருக்கும். அதனலாதான், பிருந்தா மாஸ்டர்கிட்டே சொல்லி அந்த மேனரிசத்தைப் பாட்டுல சேர்த்துட்டோம்.

கீர்த்தி திறமையான நடிகை. யாரைப் பார்த்தும் ஃபாலோ பண்ணனும்னு நினைக்க மாட்டாங்க. தமிழ்ல முதன்முதலா 'ரஜினி முருகன்' படத்துலதான் சொந்தக் குரல்ல டப்பிங் பேசினாங்க. 'நல்லா தமிழ் பேசுறீங்களே... சொந்தக் குரல்லயே பேசலாமே? தேசிய விருதெல்லாம் சொந்தக் குரல்ல பேசினாதான் கிடைக்கும்'னு என்கரேஜ் பண்ணேன். 'ரஜினி முருகன்' படத்துக்கு சொந்தக் குரல்லயே டப்பிங் பண்ணி பிரமாதப்படுத்திட்டாங்க. அதுலருந்துதான், மற்ற மொழிகளிலும் சொந்தக் குரலையே பயன்படுத்தினாங்க. 'மகா நடிகை' படத்துக்காக தேசிய விருதும் கிடைச்சது. ரொம்ப அர்ப்பணிப்புள்ள நடிகை. அவங்களை இப்படி குறைச்சு மதிப்பிட்டுடக்கூடாது" என்பவரிடம் "சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராகிவிட்டார்... சூரி ஹீரோவாகிவிட்டாரே.. எப்படி இருக்கு?" என்றோம்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'ரஜினி முருகன்' கதையை நிறைய ஹீரோக்கள்கிட்டே சொன்னேன். காதுகொடுத்துக் கேக்கவே இல்ல. ஆனா, சிவகார்த்திகேயன் சார்தான் நம்பிக்கையோட பண்ணினார். அவரோட நம்பிக்கை வெற்றியையும் கொடுத்துச்சு. அதனால்தான், அவர் சினிமாவுல மாஸ் ஹீரோவா வரணும்னு 'சீமராஜா' கதையை ரெடி பண்ணேன். அதுல, சில தடுமாற்றங்கள் வந்தாலும் இன்னைக்கு அவரோட வளர்ச்சி 'அமரன்'ல வந்து நிற்குது. அவரோட நல்ல மனசுக்கும் கடுமையான உழைப்புக்கும் இன்னும் பெரிய வெற்றிகளைக் குவிப்பார்.

ரஜினி முருகன்

சூரி, நான் ஆச்சர்யப்படுற அன்பு அண்ணன். கடுமையான உழைப்பாளி. அவரோட உழைப்பு எப்படின்னு 'விடுதலை' படத்துலேயே பார்த்திருப்பீங்க. 'சீமராஜா படத்துக்காக நீங்க சிக்ஸ்பேக் வைக்கலாமே பிரதர்'னு கேட்டேன். வெச்சுட்டா போச்சுன்னு சொல்லி, அடுத்தநாளே முயற்சில இறங்கிட்டார். சிக்ஸ் பேக்ல ஆரம்பிச்சது அவரோட வாழ்க்கை. அதுக்கப்புறம் வெற்றிமாறன் சார் கண்ணுல பட்டு 'விடுதலை', 'கருடன்'ன்னு தொடர்ந்து ஹீரோவா பண்ணிட்டிருக்கார். அவரோட வெற்றிக்குக் காரணம் உழைப்புதான்.

'விடுதலை' படத்தை தக்க வெச்சுக்க நிறைய கஷ்டப்பட்டார். பயிற்சியின்போது கையெல்லாம் உடைஞ்சது. தையல் எல்லாம் போட்டாங்க. தவம் மாதிரி காத்துக்கிட்டிருந்து 'விடுதலை' பண்ணார். அந்த ஒரு படத்துக்காக பத்து காமெடி படங்களைத் தவிர்த்துட்டார். இன்னைக்கு மக்கள் மனசுல ஹீரோவா நிலைச்சதுல ரொம்ப சந்தோஷம்" என்று மனதார வாழ்த்துபவரிடம் "'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' எந்த நிலையில இருக்கு?" என்றோம்,

"வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' பண்ணனும்னு விருப்பம்தான். ஆனா, சிவகார்த்திகேயன் 'அமரன்' மாதிரி சீரியஸான படங்கள் பண்றதால 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மாதிரி ஜாலியான இளைஞரா நடிப்பாரான்னு தெரியல. ஆனா, கண்டிப்பா நான் பண்ணுவேன். இடையிடையே ஸ்கிரிப்ட் ஒர்க்கும் போய்க்கிட்டிருக்கு" என்கிறவரிடம் "உங்கக்கிட்டே இருந்து எப்போ சீரியஸ் படங்களைப் பார்க்கலாம்?" என்றோம்.

ரஜினிமுருகன்

"காமெடி படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்பவும் வரவேற்பு இருக்கு. அதை உண்மைன்னு சாட்சிப்படுத்தியிருக்கு 'மதகதராஜா' வெற்றி. என்ன பிரச்சனைன்னா, இப்போ எந்த ஹீரோவும் காமெடி கதைகள் கேட்கிறதில்ல. துப்பாக்கி, அருவா பக்கம் போய்ட்டாங்க. வேஷ்டி கட்டி நடிக்கவும் பிடிக்கல. நீங்க பார்த்துக்கிட்டே இருங்க. ஒரு காமெடி படம் வந்து பெரிய ஹிட் கொடுத்து அடிச்சு நொறுக்கும்போதுதான் எல்லா ஹீரோவும் வருவாங்க. காமெடி கலந்த குடும்பப் படங்கள் பண்றதுலதான் எனக்கு விருப்பம். என்னோட ஃபேவரைட் காமெடி படங்கள் 'உள்ளத்தை அள்ளித்தா', 'கரகாட்டக்காரன்', 'வருஷம் 16' தான்" என்கிறார் அதே உற்சாக புன்னகையோடு.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

'இளையராஜாவுக்கு மரியாதை செய்யணும்னு ஒன்றிய அரசுக்கு புத்தி வரலையே...' - கடுகடுக்கும் வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜாவை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆதியில், இசை தமிழில் இர... மேலும் பார்க்க

Karthi: `இது மாஸான காம்போ' - கார்த்தியுடன் இணையும் சிம்புவின் கூட்டணி; ஆச்சரிய அப்டேட்

இப்போது நலன் குமாரசாமியின் 'வா வாத்தியார்', பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் 'சர்தார் 2' படங்களில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி, அடுத்தடுத்து அசத்தலான லைன் அப்களை வைத்துள்ளார். 'டாணாக்காரன்' தமிழ், ல... மேலும் பார்க்க

`` 35 நாள்கள் இழவு வீட்டில் இருந்து நடித்தோம்" - நெகிழும் கீதா கைலாசம்

அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் கடந்த 7-ம் தேதி வெளியான படம், ‘எமகாதகி’. இதில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா எனப் பலர் நடித்துள்ளனர்.... மேலும் பார்க்க

Kamal: 'இந்த கடிதத்தை காலத்துக்கும் மறக்க முடியாது' - கமல் அனுப்பிய கடிதத்தைப் பகிர்ந்த கொட்டாச்சி

நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி பல வருடங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன், அவருக்கு அனுப்பிய கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். கமல்ஹாசன் எழுதி இருக்கும் அந்தக் கடிதத... மேலும் பார்க்க

`நாங்க வேறலெவல் பெர்பாமெர்கள்!' - தமிழ் சினிமாவின் தற்போதைய கவனித்தக்க குணசித்தர நடிகர்கள்| Depth

ஒரு திரைப்படத்தின் கதையை முழுமையாகப் பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு நடிகர்களின் பங்கு முக்கியமானதொரு விஷயம். எழுத்தைக் காட்சிகளாக பார்வையாளனுக்குக் கடத்துவதில் நடிப்பு ஒரு பிரதான பங்களிப்பைச் செலுத்து... மேலும் பார்க்க

``நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப்போவத்தில்லை... "- சினிமா குறித்து குஷ்பு

நடிகை குஷ்பு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சினிமா சார்ந்த சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், "பெண்களை மையமாகக் கொண்ட படம் எப்போதுமே பிளாக்பஸ்டர் ஆகாது. நான் என் வார்... மேலும் பார்க்க