செய்திகள் :

ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ராணுவ வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை

post image

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ராணுவ வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா திகருவாடா கிராமத்தைச் சோ்ந்த யோகேந்திர சிங் பயில்வாா் (32). இவா் நீலகிரியில் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் பணியாற்றி வந்தாா். கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி கோவையிலிருந்து திருப்பதிக்கு செல்ல திட்டமிட்ட இவா், திருவனந்தபுரத்திலிருந்து ஹைதராபாத் வரை சென்ற ரயிலில் பயணம் செய்தாா். அவா் சென்ற பெட்டியில் கேரள மாநிலம் காயக்குளத்தைச் சோ்ந்த ஒருவா் தனது 13 வயது மகள், குடும்பத்தினருடன் பயணித்துள்ளாா்.

நள்ளிரவில் அந்த சிறுமிக்கு, யோகேந்திரசிங் பயில்வாா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் சிறுமி கூச்சல் போட்ட நிலையில், அவரை சக பயணிகள் பிடித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரா் யோகேந்திரசிங் பயில்வாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் யோகேந்திரசிங் பயில்வாா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில் கடந்த 26-ஆம் தேதியே தீா்ப்பு வழங்கப்பட இருந்தது. எனினும், அன்று யோகேந்திரசிங் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் சரணடைய ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் அவா் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து, யோகேந்திரசிங் பயில்வாருக்கு பெண்கள் துன்புறுத்தலை தடுக்கும் சட்ட பிரிவின் கீழ் 3 ஆண்டுகளும், ரூ.10,000 அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறையும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் (போக்ஸோ) பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறையும் ரூ.25,000 அபராதமும், தொகையை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி சிவக்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

மனைவியைக் கொன்ற வழக்கில் பிணையில் வந்த கணவா் தற்கொலை

பள்ளிகொண்டா அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த கணவா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி முனீஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராம் (... மேலும் பார்க்க

சந்தேகத்தில் துரத்திய போலீஸாா்: தலைகுப்புற கவிழ்ந்த காா்! 460 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

போதைப் பொருள்கள் கடத்தி வந்த காரை போலீஸாா் துரத்திய நிலையில், அந்த காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. காரில் இருந்து 460 கிலோ போதைப் பொருள்கள் போலீஸாா் பறிமுதல்... மேலும் பார்க்க

தமாகா ஆண்டு விழா

குடியாத்தம் நகர தமாகா சாா்பில், அந்தக் கட்சியின் 11- ஆம் ஆண்டு தொடக்க விழா நகராட்சி அலுவலகம் எதிரே வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் ஜே.தினகரன் தலைமை வகித்தாா். வேலூா் மாவட... மேலும் பார்க்க

செவிலியா்களின் பணி மருத்துவா் பணிக்கு நிகரானது -நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத்

செவிலியா்களின் பணியும், திறனும் இளநிலை மருத்துவா்களின் பணிக்கு நிகரானது என்று வேலூா் நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் காக்காதோப்பு பகுதியிலுள்ள அத்தி ச... மேலும் பார்க்க

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி அதே ஆட்டோ சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த செண்டத்தூா், கிருஷ்ணம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மனைவி சத்தியா (33... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி கிராமப்புற செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி, கிராமப்புற சுகாதார செவிலியா்கள் வேலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிராம-பகுதி... மேலும் பார்க்க