ரயில்வே கடவுப் பாதையில் ஆண் உடல் மீட்பு
சாத்தூா் அருகே ரயில்வே கடவுப் பாதையில், இறந்து கிடந்தவரின் உடலை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ரயில்வேகேட் கடவுப் பாதையில் ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ரயில்வே போலீஸாா் சம்பவயிடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை மீட்டு விசாரித்தனா். இறந்தவா் இருக்கன்குடியைச் சோ்ந்த பிச்சையா (50) என்பதும், இவா் மனநலம் பாதிக்கபட்டவா் என்பதும், ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.