செய்திகள் :

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை ‘உசுப்பிவிட்ட’ பைடன்... 3-வது உலகப் போருக்கு அச்சாரமா?!

post image

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பதவிக் காலம் முடியும் தருவாயில் மிக முக்கிய நகர்வாக, நீண்ட தூர சென்று தாக்கவல்ல சக்திவாய்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான உக்ரைன் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அர்த்தம் உக்ரைன் படைகள் அமெரிக்கத் தயாரிப்பு சக்திவாய்ந்த ஏவுகணைகளின் மூலம் முதன்முறையாக ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதற்காக கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்பதே.

ஏற்கெனவே 1000 நாள்களாக ஆக்ரோஷமான எரிந்து கொண்டிருக்கிற ரஷ்ய - உக்ரைன் போர் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

விரைவில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், அவரின் மகனான டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், “உலக அளவில் அமைதியை உருவாக்கி உயிர்களைக் காப்பாற்றும் வாய்ப்பு எனது தந்தைக்கு கிடைப்பதற்கு முன்பே, மூன்றாம் உலகப் போரைத் தொடங்குவதற்கு ராணுவம் விரும்புவதாக தெரிகிறது” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து ரஷ்ய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில், “விரைவில் வெளியேற உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிகவும் ஆத்திரமூட்டக்கூடிய, எதையும் கணக்கில் கொள்ளாத முடிவுகளில் ஒன்றை எடுத்துள்ளார். இது பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இது சந்தேகமே இல்லாமல் மூன்றாம் உலகப் போரை நோக்கி கொண்டுசெல்லும் ஒரு செயல் என்று ரஷ்ய அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுவரை ரஷ்ய அதிபர் புதின் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. ஆனால், அவரது செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “உண்மையிலேயே இதுபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், இந்தப் போரில் அமெரிக்காவின் தலையீடு தொடர்பாக ஒரு புதிய பதற்றம் உருவாகியுள்ளது என்றே அர்த்தம்” என்று தெரிவித்துள்ளார்.

இன்னொரு புறம், உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் வட கொரியப் படைகளை யுத்த பகுதிக்குள் கொண்டு வந்ததன் மூலம் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது உண்மையில் ரஷ்யாதான் என்பகின்றனர் உலக அரசியல் நோக்கர்கள்.

ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா சுமார் 1 லட்சம் வீரர்களை உக்ரைன் படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யப் படைகள் கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து முன்னேறி வருவதால், ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூரம் சென்று தாக்கும்  ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி பல மாதங்களாகவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட தனது மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.

கடந்த மார்ச் மாதமே அமெரிக்கா ரகசியமாக உக்ரைனுக்கு ஏவுகணைகளை அனுப்பி விட்டாலும், ரஷ்ய எல்லைக்குள் அவற்றைக் கொண்டு தாக்க உக்ரைனுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. அதன்பிறகு ஏப்ரல் இறுதியில் ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியா பகுதியில் இரண்டு முறை ஏவுகணைகளை பயன்படுத்தியது உக்ரைன்.

அமெரிககவால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஏவுகணைகள் ATACMS (Army Tactical Missile System) என்று அழைக்கப்படுகிறது. 1980-களில் தயாரிக்கப்பட்ட இவை, 300 கி.மீ தொலைவு பாய்ந்து சென்று தாக்க வல்லவை. ATACMS ஏவுகணைகளை வழங்கும் முன்பே 160 கி.மீ பறந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய சிறிய ரக ஏவுகணைகளை அனுப்பி வைத்தது.

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள குர்ஸ்க் பகுதியில் முகாமிட்டிருக்கும் ரஷ்ய மற்றும் வடகொரிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு இந்த ஏவுகணைகள் மிக முக்கியமாக கருதப்படுகிறது. ரஷ்யாவின் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தவே அதிக வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் கணித்துள்ளது.

அமெரிக்கா மட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை வழங்கியுள்ளன. பைடனின் இன்றைய நடவடிக்கைக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பைடனின் இந்த முடிவை அமெரிக்காவில் உள்ள ட்ரம்ப் ஆதரவாளர்கள் பலரும் ரசிக்கவில்லை. எம்.பி.யும் ட்ரம்ப் ஆதரவாளருமான மார்ஜோரி டெய்லர் கிரீன், ‘அமெரிக்க மக்கள் கடந்த நவ.5-ஆம் தேதியே தீர்ப்பை வழங்கிவிட்டனர். வெளிநாட்டுப் போர்களுக்கு நிதியளிக்கவோ அல்லது போராடவோ அவர்கள் விரும்பவில்லை. எங்களின் பிரச்னைகளை நாங்களே சரி செய்து கொள்ள விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 62% அமெரிக்கர்கள் ரஷ்யாவின் தாக்குதலை தடுத்து நிறுத்த அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கவேண்டும் என்று விரும்புவதாக தெரியவந்தது. வரும் ஜனவரி 20-ஆம் தேதி ட்ரம்ப் பதவியேற்றதும் பைடனின் இந்த ஒப்புதலை ரத்து செய்வாரா அல்லது இதே நிலை தொடர அனுமதிப்பாரா என்பதை இப்போதே கணிக்க இயலாது. 

தற்போதைக்கு தங்களது தாக்குதல் வரம்புக்கு அப்பால் சென்றுவிட்ட ரஷ்யாவின் விநியோக சங்கிலியை குறிவைத்தே உக்ரைனின் தாக்குதல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த ஒப்புதலையடுத்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள், அதாவது ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்த முனையும். உக்ரைனும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணை தாக்குதலை கையில் எடுக்கும்.

இதனிடையே  ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மறு பரீசீலனை செய்து புதிய கோட்பாட்டை இணைத்து ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி, அணு ஆயுதம் இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற புதிய கோட்பாடு இணைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,``அணு ஆயுதம் இருக்கும் நாட்டுடன் (அமெரிக்கா) கூட்டு சேர்ந்து, அணு ஆயுதம் இல்லாத நாடு (உக்ரைன்) தாக்குதல் நடத்தினால் அது கூட்டுத் தாக்குதல் என்றே கருதப்படுகிறது. இந்த சூழலை எதிர்கொள்ள அதற்கேற்ப எங்கள் கொள்கைகளைக் கொண்டுவருவது அவசியம். தற்போது ரஷ்ய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் இந்தக் கோட்பாடு மிக முக்கியமான ஆவணம். ரஷ்யா எப்போதும் அணுவாயுதங்களை தடுப்பதற்கான வழிமுறையாகவே பார்க்கிறது. இந்தப் போரை எதிர்க்கொள்ள அணு ஆயுதம் கட்டாயம் என உணர்ந்தால் மட்டுமே அவை பயன்படுத்தப்படும்" என்றார்.

எப்படி பார்த்தாலும் ஜோ பைடனின் இந்த நடவடிக்கை என்பது உக்ரைன் - ரஷ்யா போர் மேலும் தீவிரமடையவே வழிவகுக்கும் என்பதுதான் உண்மை.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

Ukraine War: `உணவுப்பொருள்களை சேமித்து வையுங்கள்' - குடிமக்களை போருக்கு தயாராக்கும் ஐரோப்பிய நாடுகள்

உக்ரைன் மீதான படையெடுப்புத் தொடங்கி 1000 நாள்கள் கடந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவு ரஷ்யா அணு ஆயுத போருக்கான எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறது. உக்ரைன் அமெரிக்காவின் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகனைக... மேலும் பார்க்க

``விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் அல்ல..." - வைரலாகும் உத்தரப்பிரதேச ஆளுநரின் பேச்சு!

உத்தரப்பிரதேசத்தின் ஆளுநராக பதவி வழங்கப்பட்டவர் ஆனந்த்பென் படேல். இவர் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள காஜா மொய்தீன் சிஷ்தி பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். ... மேலும் பார்க்க

MANIPUR: மணிப்பூரில் மீண்டும் வன்முறைத் `தீ'... உலக அரங்கில் சரிகிறதா `மோடி' பிம்பம்?!

கடந்த ஆண்டு, மே மாதம் தொடங்கிய மணிப்பூர் கலவரம், ஓன்றரை வருடமாக ஓயாமல் நடந்து கொண்டிருக்கிறது. சமீப மாதங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த கலவரம், தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கும்... மேலும் பார்க்க

'தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பேன்..!' - சரண்டரான தளவாய்... எடப்பாடி மனம்மாறிய பின்னணி

அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் குமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார... மேலும் பார்க்க

LIC: "தமிழ்மொழிச் சேவையையும் எல்.ஐ.சி உடனடியாகத் தொடங்க வேண்டும்"- பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

LIC-யின் இணைய தளத்தின் முகப்புப் பக்கம் ஆங்கில மொழியில் இருந்த நிலையில் இப்போது இந்திக்கு மாற்றப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. LIC-யின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. நிறுவனர... மேலும் பார்க்க

Russia - Ukraine: அதிபர் புதின் கொடுத்த ஒப்புதல்; உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதம்?!

ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. யுனிசெஃப் அமைப்பின் தகவலின் படி இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 659 குழந்... மேலும் பார்க்க