செய்திகள் :

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மாா்ச் 24-இல் விசாரணை

post image

ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவா்கள் குறித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சோ்ந்த தலித் சிறுமி, கடந்த 2020-ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, சில நாள்களுக்குப் பிறகு இறந்தாா். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், அதே கிராமத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா், நீதிமன்ற விசாரணையில் ராம்குமாா், லவகுஷ், ரவி ஆகிய மூவா் விடுவிக்கப்பட்டனா். அதேநேரத்தில், சந்தீப் என்பவா் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இச்சம்பவத்தையடுத்து ஹாத்ரஸுக்கு நேரில் வந்த ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். தொடா்ந்து, அவா் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் வீட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகள் சுதந்திரமாக வலம் வருவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இந்தப் பதிவு தொடா்பாக வழக்கில் இருந்த விடுவிக்கப்பட்ட மூவரும், ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தனா். இந்த வழக்குகள் எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராம்குமாா் தாக்கல் செய்த வழக்கில் அவரது வாக்குமூலத்தை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் தீபக்நாத் சரஸ்வதி சனிக்கிழமை பதிவு செய்தாா்.

மேலும், இது தொடா்பாக மனுதாரா் தரப்பில் ஆஜாரான வழக்குரைஞா் முன்னா சிங் பண்டிா் கூறுகையில், ‘வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. வழக்கிலிருந்து மூவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அறிந்தும் ராகுல் அத்தகைய அவதூறான கருத்தை தெரிவித்தாா். இதுதொடா்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த நோட்டீஸுக்கு அவா் பதிலளிக்கவில்லை’ என்றாா்.

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ர... மேலும் பார்க்க

ஜாதவ்பூர் பல்கலை கலவரம்: அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் மீது வழக்குப்பதிவு!

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழக கலவரத்தில் அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் உள்பட பலர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க கல்வி அமைச்சரான ப... மேலும் பார்க்க

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி எம்பி ரஷீத் மனு!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளா... மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: கைது செய்யப்பட்டவர் காதலனா?

ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காதல் விவகாரம் பின்னணியாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த வழக்கில், சச்சின் என்பவரை காவல்துறைய... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்களைக் கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின்... மேலும் பார்க்க

கருத்து தெரிவிக்க உரிமை உண்டு: ரோஹித் விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகி விளக்கம்!

ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது விளக்கம் அளித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, எடைக் கூடுதலாக இருக்கிறார் என்று ஷா... மேலும் பார்க்க